சங் பரிவாரங்களின் அகராதியில் சில வார்த்தைகளுக்கு என்றைக்குமே நேரதிர் அர்த்தம் தான் போலும்!
சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்க, ராமர் பாலம் என்ற இல்லாத ஒன்றை கையிலெடுத்துக் கொண்டு சாமியாடும் பா. ஜ.கவினரின் முரண்பட்ட நிலையையும், முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் அடிக்கடி உபதேசிக்கும் ‘தேசபக்தி ‘ மற்றும் ‘கருத்துச் சுதந்திரம்’ போன்ற தத்துவங்களுக்கும் சங் பரிவாரங்களுக்கும் துளியும் சம்பந்தமே இல்லை என்பதை மீண்டும் அறிந்து கொள்ள இப்பதிவு உதவலாம்.
1) தேசபக்தி
இந்தியாவின் மீது பற்றுக் கொள்வதை தங்களுக்கு மட்டுமே உரியதென மாய்மாலம் காட்டி, இந்திய முஸ்லிம்களை அவ்வப்போது ” தேசவிரோதிகள்” என்று சொல்லும் ‘அக்மார்க் ‘ தேச விரோதிகளான பா. ஜ.கவினர், சேது சமுத்திரத் திட்டத்தினால் நம்நாடு பெறவிருக்கும் பலன்களை அறிந்து கொண்டேதான் எதிர்க்கிறார்கள். ஏனெனில், வாஜ்பேயியுடைய ஆட்சிக் காலத்தில்தான் ‘ சேது சமுத்திரத் திட்டம்’ என்ற ஒரு திட்டமே கையெழுத்தானது.
இப்போது இத்திட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம், இத்திட்டத்தைச் செயல் படுத்திவருபவர்கள் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சியினர் என்பதைத் தவிர வேறொரு காரணம் இல்லை.
மேலும், தி. மு.கவை எதிர்ப்பதையே குலத்தொழிலாகக் கொண்டுள்ள ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோருடன் வருங்காலத்தில் தேர்தல் கூட்டணிப் பாலம் அமைக்க அடித்தளமாக (அல்லது கள்ள உறவாட ) சேதுத் திட்டத்தை முடக்குவதன் மூலம் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெறுவது பா. ஜ.கவின் தலையாய கடமையாகி விட்டது!
சேதுக்கால்வாய் திட்டத்தினால் பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் பல்வேறு பலன்கள் பலராலும் பட்டியலிடப்பட்டுள்ளன. இராணுவ ரீதியில் விரைவில் வல்லரசாகப் போகும் இந்தியாவிற்குக் கடற்படை ரீதியில் மிகவும் பயன்தரும் சேதுக்கால்வாய் திட்டத்தைத் தேசநலன் பேணும் எவருமே எதிர்க்க மாட்டார்கள். ஆனால், பாழாய்ப்போன சங் பரிவார வானரங்கள் தேச நலனாவது மண்ணாங்கட்டியாவது என்று சேதுத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
2) கருத்துச் சுதந்திரம்
சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்றவர்கள் இஸ்லாத்தையும் முஹம்மது நபியையும் விமர்சிப்பதை எதிர்த்து முஸ்லிம்கள் கொதிந்தெழும் போதெல்லாம், “கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து” என்று ஒப்பாரியிடும் ஊடகங்களும் அவர்களுடன் சேர்ந்து பஜனைபாடும் பரிவாரங்களும்தான் கடந்தவாரம் ராமரைப் பற்றிக் கருத்து சொன்னதற்காகத் தமிழக முதல்வர் கருணாநிதியின் நாக்கையும் தலையையும் கொய்து வந்தால் எடைக்கு எடை பொற்குவியல் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
முஸ்லிம்களை மட்டுமல்ல, தங்களுக்கு எதிரான எவரும் – அவர் ஒரு மாநில முதலமைச்சராகவே இருந்தாலும் – கொல்லப்படுவர் என்பதற்கு, ராம்விலாஸ் வேதாந்தியின் வெறிப்பேச்சே சான்று. கொதிந்தெழுந்த திமுக அனுதாபிகள் பா.ஜ. க அலுவலகத்தைத் தாக்கினார்கள். இதுபற்றிக் கருத்துச் சொன்ன பா.ஜ.க தலைவர்கள், “யாரோ ஒரு வேதாந்தியின் பேச்சிற்காக எதற்கு எங்கள் மீது பாயவேண்டும்?” என்று கூக்குரலிட்டார்கள்.
தீவிரவாதச்செயலில் முஸ்லிம் பெயர்தாங்கி எவனாவது ஈடுபடும் போதெல்லாம், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் வசைபாடும் பரிவாரங்களின் பபூன் தனத்தைப் பார்த்து நாடே சிரிக்கிறது.
பிறப்பால் முஸ்லிம்களான ருஷ்டியும் நஸ்ரினும் இஸ்லாத்திற்கு எதிராக எழுதியபோது, கருத்துச் சுதந்திரம் கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் பிதறியவர்கள், பிறப்பால் இந்துவான கருணாநிதி ராம
ர் பற்றிக் கருத்துச் சொன்னதற்கு கோபம் கொள்வதேன்? ருஷ்டிக்கும் நஸ்ரினுக்கும் மட்டும் தான் கருத்துச் சுதந்திரமா? மாநில முதல்வரான கருணாநிதிக்கு இல்லையா?
இப்படியாக சங்பரிவாரங்களாகட்டும் அவர்களின் அரசியல் முகமூடி பா.ஜ. க ஆகட்டும் அவர்களிடம், “ராமனா? இந்தியாவா?” என்ற கேள்வியை முன்வைத்தால் ராமனுக்குத்தான் முதலிடம்; இந்திய நலன் இரண்டாம் பட்சமே என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளனர்.
கருத்துச் சுதந்திரம் , தேசபக்தி என்பதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்த மட்டுமே என்பதற்கு சேதுக் கால்வாய் விசயத்தில் சங் பரிவாரங்களின் முரண்பட்ட நிலைகள் மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
இனி சங்பரிவாரங்கள் குறிப்பாக பா.ஜ. கவினர் “தேசபக்தி , கருத்துச் சுதந்திரம்” என்று நாட்டு மக்களை ஏமாற்றி மீண்டும் ஓட்டுக்கேட்க வந்தால் ‘ நாக்கை’ அறுக்க வேண்டும் !
பாபர் மசூதியை இடிக்கவும் ராமர் பெயர், சேது திட்டத்தை எதிர்க்கவும் ராமர் பெயர்தானா. ராமரை ஏன் இந்த பாடுபடுத்துகிறீர்கள். ஏன் இப்படி ராமரை பலிகடாவுக்குகிறீர்கள். கெட்ட காரியத்துக்குப் பயன்படுத்தும் பெயரை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தக் கூடாதா?
Nobody is aganist that project. Why it has to be done aganist demolishing the belief of millions ?
MK spits his venom aganist hindus and its religion.
What Vethanthi said is brutal. Which has to be condemmed.
But one this is for sure, if it would have been some “other” religion they would have not stopped after saying. They would have executed it.
அணானி,
பெரும்பான்மையினரின் நம்பிக்கையைத் தகர்த்து இத்திட்டம் ஏன்செயல் படுத்தப்படவேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு நீங்களே பதிலும் சொல்லியுள்ளீர்கள். ஆம்! “Nobody is aganist that project” சேதுக் கால்வாய் திட்டத்தை தூசிதட்டிய வாஜ்பாயும், அதற்கு அமைச்சக ரீதியில் ஒப்புதல் வழங்கிய திருநாவுக்கரசரும்,தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை விரைவு படுத்த வலியுறுத்திய ஜெயலலிதாவும் எதிர்க்கவில்லை அப்போது Nobody ”was” aganist that project இன்று “is” aganist that project! ஏன்?
கருணாநிதி இந்துக்களையும் இந்து மதத்தையும் தூற்றினால் அதற்கு யார் காரணம் என்று சீர்துக்கி ஆராய்ந்து, அவ்வாறு தூற்றுவதற்குக் காரணமான காரணிகளைக் களைவதற்கு ஜகத்குருக்களாக தங்களைச் சொல்லின் கொள்ளும் எவருமே முயற்சி செய்யவில்லை.மாறாக பெரியார், கருணாநிதி போன்றோர் எக்காரணங்களுக்காக தூற்றினார்களோ அவற்றை மேற்படி மடாதிபதிகள்/ஜகத்குருக்கள் நிலை நிறுத்தவே செய்து வந்துள்ளனர். ஆக, நியாயமாக நீங்கள் கோபப்பட வேண்டியவர்களும் மேற்படி மடாதிபதிகள் / ஜகத்குருக்களே!
ராம் விலாஸ் வேதாந்தியின் பேச்சை எந்த இந்து மதப்பிரதிநிதிகளும் கண்டித்திருப்பதாக அறிய முடியவில்லை; வேதாந்தியை விட தினம் விஷம் கக்கும் தொக்காடியாவையும், பால்தாக்கரேயையும், மோடியையும் ராம கோபாலனையும் கண்டித்து குறைந்தபட்சம் அறிக்கையாவது விட்ட எந்த இந்துத்தலைவரையும் காட்ட முடியுமா?
//இதுபற்றிக் கருத்துச் சொன்ன பா.ஜ.க தலைவர்கள், “யாரோ ஒரு வேதாந்தியின் பேச்சிற்காக எதற்கு எங்கள் மீது பாயவேண்டும்?” என்று கூக்குரலிட்டார்கள்.//
தத்தம் சமுதாயம் பாதிக்கப்பட்ட போது இதே குரலை முன்பு எழுப்பிய பிற மதத்தினரின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்த பா.ஜ.க-வினரின் அம்பலத்திற்கு வந்த இந்த இரட்டை வேடத்தைக் கண்டு இந்தியாவே எள்ளி நகையாடியிருக்கிறது.
மதவாதத்தை மட்டும் முதலீடாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜக-வினரின் பின்னால் போகும் அப்பாவி இந்துக்கள் “கருத்துச் சுதந்திரம்” என்ற வார்த்தையின் முழு பரிமாணத்தை இப்போது தெள்ளத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
test
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this http://www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.