2. தகவல்களை ஊர்ஜிதப்படுத்தல்
ஊடகவியலாளன் தனக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் அவற்றை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாதவரை வெளியிடலாகாது.
“உங்களிடம் ஒரு பாவி ஒரு செய்தியை எடுத்து வந்தால் (அதனை) தீர்கமாத விசாரித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் அறியாமையின் காரணமாக ஒரு சமூகத்தை பாதிக்கும் முடிவுகளுக்கு வந்துவிடக் கூடும். அப்போது நீங்கள் செய்ததை நினைத்து கைசேதப் படுவீர்கள்.” (49-06)
நபி (ஸல்) அவர்கள்
“ஒருவன் தனது காதுக்கு கிட்டும் தகவல்கள் அனைத்தையும் எடுத்துக் கூறுவது (அவற்றை ஊர்ஜிதப்படுத்தாமல் வெளியிடுவது) அவன் பொய்யன் என்பதற்கு அதுவே போதுமானதாகும்” என்றார்கள். (முஸ்லிம்)
மேற்குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் ஓர் ஊடகவியலாளன் ஆதாரமற்ற செய்திகள் வதந்திகள் சமுதாயத்தில் உலாவரும் போது அவற்றை நன்கு ஆராய்ந்து உண்மைகளை துல்லியமாக கண்டறிந்து அவற்றை மாத்திரமே வெளியிடவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றது.
அடுத்து 3. இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் (கீழே அடுத்த பக்க எண்ணை கிளிக் செய்யவும்)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
MASHA ALLAH.
Ungalathu Aakkangal Emakku Ookkangalaha Irukkinrana
jazakallahu Ahsanul Jazaa…