Featured Posts

[12] முடிவுரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-12 நிறைவாக நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது: உண்மையில் பித்அத்துகள் குப்ரின் பால் இட்டுச் செல்வதாகும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மார்க்கமாக்காதவைகளை அதிகப்படுத்துவதாகும். பித்அத் என்பது பெரும் பாவங்களை விட மிகக் கொடியதாகும். பெரும் பாவங்களை ஒருவன் செய்யும் போது ஷைத்தான் மகிழ்ச்சியுறுவதை விட, பித்அத்துகளை செய்யும் போது பன்மடங்கு மகிழ்ச்சி அடைகின்றான்.

Read More »

[11] வணக்க வழிபாடுகளில் பித்அத்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-11 அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறும் நோக்கில் வணக்க வழிபாடுகளில் பித்அத்துகளை ஏற்படுத்தல்: வணக்க வழிபாடுகளில் உருவாக்கப்பட்ட பித்அத்துகளில் இந்தக் காலங்களில் அதிகமான பித்அத்துகள் புகுத்தப்பட்டிருக்கின்றன என்றால் மிகையாகாது. வணக்க வழி பாடுகளை (இபாதத்தை)ப் பொறுத்த வரையில் அதன் அடிப்படை (நிறைவுற்றதாகும்) தடுக்கப்பட்டதாகும். ஆதாரமின்றி எந்த ஒன்றையும் மார்க்கமாக்க முடியாது, எதற்கு ஆதாரமில்லையோ அது பித்அத்தாகும்.

Read More »

[10] நவீன காலத்தின் சில வழிகெட்ட பித்அத்துகள்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-10 நிகழ் காலத்தில் பித்அத்துகள் பல வகையிலும் அதிகரித்துக் காணப்படுவதின் காரணம், காலத்தால் பிந்தியது, அறிவு குறைந்து காணப்படுவது, பித்அத்தின் பக்கமும், மார்க்கத்துக்கு புறம்பானவைகளின் பக்கமும் அழைப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். மறைமுகமாக காபிர்களின் பழக்க வழக்கங்களுக்கும், அவர்களின் மதரீதியான விடயங்களுக்கும் ஒப்பாக நடத்தல்.

Read More »

[09] பித்அத் வாதிகளின் விஷயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-9 1) பித்அத் வாதிகளின் விஷயத்தில் இஸ்லாமிய உம்மத்தின் நிலைப்பாடு 2) அவர்களுக்கு மறுப்புக் கொடுப்பதில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் போக்கு பித்அத் வாதிகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடு: அஹ்லுஸ் ஸுன்னத் வவ் ஜமாஅத்தினர் எல்லாக் காலங்களிலும் அவர்களின் செயல்களை நிராகரிப்பவர்களாகவும், அவர்களுக்கு மறுப்புக் கொடுப்பவர்களாவும், அவர்களின் செயல்களை தடுப்பவர்களாகவுமே இருந்து …

Read More »

[08] பித்அத்துகள் தோன்றுவதற்குரிய காரணிகள்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-8 அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பற்றிப்பிடித்துக் கொள்ளும்போது ஒருவன் பித்அத்துகளிலிருந்தும் வழிகேடுகளிலிருந்தும் பாதுகாக்கப்டுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘நிச்சயமாக இது எனது நேரான வழியாகும் இதைப் பின்பற்றுங்கள், பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் அது உங்களை நேரான வழியை விட்டு தூரப்படுத்தி விடும்’ (அல் அன்ஆம்: 6:153).

Read More »

[07] பித்அத்துகள் தோன்றிய இடம்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-7 இரண்டாவது விடயம்: பித்அத்துகள் தோன்றிய இடம் பல்வேறுபட்ட பித்அத்துகள் முஸ்லிம் நாடுகளில் உருவாகத் தொடங்கியது. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்படுவது போல: ‘ஸஹாபாக்கள் வாழ்ந்த மிகப் பெரும் நகரங்கள் ஐந்தைக் குறிப்பிடலாம் அவற்றிலிருந்து அறிவின், ஈமானின் ஒளிச்சுடர்கள் வெளிப்பட்டன.

Read More »

“முத்ஆ திருமணம்” ஒரு தெளிவான விபச்சாரம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் முத்ஆ திருமணம் என்பது ஒரு தெளிவான விபச்சாரம் என்பது சாதாரண மக்களுக்கும் புரிகின்றது. எனவே, முஸ்லிம் பொதுமக்களிடம் ஷிஆயிஷத்தைப் பரப்புவதில் சிக்கல் ஏற்படுகின்றது என்பதால் ஷிஆக்கள் தமது வழக்கமான யூதப் பாணியிலான சதித் திட்டங்களில் ஈடுபடுகின்றனர். முத்ஆ திருமணம் ஏனைய திருமண முறைகளைப் போன்றதுதான் என நிலைநாட்டி தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.

Read More »

காஸா – இரத்தம் சிந்தும் பூமி

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் புனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இஸ்ரேல் எனும் சட்டவிரோத தேசத்தை உருவாக்கினர். இதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஒத்து ஊதின.

Read More »

[06] முஸ்லிம்களின் வாழ்க்கையில் பித்அத்தின் தாக்கம்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-6 முஸ்லிம்களின் வாழ்க்கையில் பித்அத்தின் தாக்கமும், அவைகளுக்குரிய காரணங்களும் இதன் கீழ் இரண்டு விடயங்கள் ஆய்வு செய்யப்படும்: முதலாவது: பித்அத்துகள் தோன்ற ஆரம்பித்த காலம்:

Read More »

[05] எச்சரிக்கை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-5 மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது! பித்அத்தை யாராவது நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்று பிரிப்பாரானால் அவர் மிகப் பெரிய தவறை செய்தவராவார், இன்னும் நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு மாற்றம் செய்தவராவார். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ‘ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்’ எனக்கூறியுள்ளார்கள்.

Read More »