Featured Posts

நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?

நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா தேடுவதை நபித்தோழர்களும், தாபியீன்களும்வழக்கமாக்கிக் கொள்ளவில்லை.

Read More »

ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்

– கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்!!நன்றி: தலித் முரசு (அக். – நவம்பர் 2005)…! ? கொடிக்கால் செல்லப்பாவாக இருந்த நீங்கள், எந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வாக மாறினீர்கள்? ! 1986ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாறினேன். 8,9 வயது இருக்கும்போது எங்கள் பகுதியில் தலித், அதற்கு அடுத்தபடியாக நாடார்கள்தான் அதிகமாக இருந்தார்கள். “உயர்சாதி” என்று சொல்லப்படுகிறவர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அறவே எங்கள் பகுதியில் இல்லை. நாடார்களும் தலித்துகளும் பல சாதிக் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (4)

முதல் இஸ்லாமிய அரசு. முதலாவது இஸ்லாமிய அரசு மிகச் சிறிய நகர அரசாக உருவாகியது. சில சதுர மைல் பரப்புடையதாகவும், சில ஆயிரம் மக்களைக் கொண்டதாகவும் அது அமைந்தது. எனினும் இச்சிறு அரசு சில ஆண்டுகளிலேயே முழு அரேபியாவையும் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்து விட்டது. இவ்வெற்றிக்குக் காரணம், இஸ்லாமிய சன்மார்க்கக் கொள்கையின் ஒவ்வொரு முக்கிய அம்சத்தையும் அது தன்னகத்தே கொண்டிருந்ததாகும். அதில் இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அதன் உண்மைத் தோற்றத்தில் …

Read More »

காஷ்மீர் ஓர் பார்வை-4

இந்தியாவிற்கு தலைவலி அளித்த சமஸ்தானங்கள்.ஜுனேகாத், ஹைதராபாத், காஷ்மீர் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பகுதிகள் இருந்தன. இப்பகுதிகளில் மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவை சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்த சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத சுயாட்சிப் பெற்ற பகுதிகளாக இருந்த போதிலும் பிரிட்டிஷ் பேரரசின் உத்தரவுகளுக்கு அவ்வப்போது கீழ்படியும் நிலையில்தான் அவை இருந்தன. இதுபோன்ற …

Read More »

முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்

ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் இருந்தவர்களும் தத்தம் கரங்களை ஏந்தி மன்றாடினர். பிறகு மழை பெய்தது. இதை அடிப்படையாக …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (3)

முதற் கட்டம்: இலட்சிய காலம்முதலாவது கட்டத்தில் இஸ்லாம் அதன் எளிமையான தூய உருவில் காட்சியளிக்கிறது. ஓங்கு புகழுடனும் மாசுமருவற்ற பேரொளியுடனும் மிளிர்கிறது. சிற்றின்பத்தில் திளைத்து ஒழுக்க, ஆன்மீக உணர்வுகள் மரத்துப் போன ஒரு சமுதாயத்தில் இஸ்லாம் பிறந்தது. நண்பர்களின் உறவின்றி தன்னந்தனியாக நின்ற வறிய, ஆனால் பிரபஞ்சத்தின் ஆன்மீக அம்சத்தினை நன்குணர்ந்த ஒரு மனிதரை மூன்று அடிப்படை நம்பிக்கைகள் மீது மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இறைவன் நியமித்தான். இறைவனில் …

Read More »

ஷபாஅத் விஷயத்தில் ஸுன்னத் ஜமாத்திற்கு மாறுபட்டவர்களின் அபிப்பிராயம்

ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும், காரிஜிய்யா வகுப்பாரைச் சேர்ந்த வயீதிய்யாப் பிரிவினரும் மறுமையில் நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை மூமின்களின் பதவியை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பதவியை உயர்த்தும் விஷயத்தில் மட்டும்தான் மறுமையில் ஷபாஅத் செய்வார்களாம். இப்பிரிவினரில் மற்றும் சிலர் நபிகளின் ஷபாஅத்தை அடியோடு மறுக்கிறார்கள். பெருமானாருக்கு ஷபாஅத்தே இல்லையாம்.

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (2)

இனி, ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பதற்குக் கொள்ளப்படும் மற்றிரு பொருள்கள் பற்றிக் கூற விரும்புகிறேன். இப்பொருள்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என நான் கருதுகிறேன். முதலாவதாக ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பது பின்வரும் பொருள்களைக் குறிக்கலாம்: இன்றைய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அழைப்பினை எவ்வாறு ஏற்றுள்ளனர்? எந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் இஸ்லாத்தின் முத்திரை பதிந்துள்ளது? அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாம் என்பது அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும் கண்ணியமானதாக்கவும் ஆற்றல் பெற்ற ஒரு சக்தியாகத் திகழ்கின்றதா? …

Read More »

வினாவும் விடையும்

வினா: இஸ்லாமிய மார்க்கத்தின் இமாம்களான அறிஞர்களிடம் கீழ்வரும் மஸ்அலா பற்றி கேட்கப்படுகிறது. அதாவது நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு வஸீலா தேடி அவர்களிடம் ஷபாஅத்தை வேண்டுவதில் அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததுமான முறைகளையும், அதன் விதிகளையும் விளக்க வேண்டும்.

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (1)

1. பிரச்சினையின் தன்மை. இஸ்லாத்தின் இன்றைய நிலை பற்றிப் பேசுமாறு என்னைக் கேட்டிருக்கிறார்கள். எனக்குத் தரப்பட்டுள்ள இவ்விடயத்தின் பொருளைத் தெளிவுபடுத்தவும், இவ்விடயம் எவ்வளவு விரிவானது என்பதை வரையறுத்துக் கூறவும், முதலாவதாக ஒரு சில வார்த்தைகளைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ பலவாறாக விளக்கப் பட்டுள்ளது. அதனால் தான் இவ்விடயத்தின் பொருளையும் விரிவையும் வரையறுத்துக் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்துக்குத் தரப்படும் நான்கு கருத்துக்களை நாம் …

Read More »