Featured Posts

சேதுவா? ராமரா?

தற்போது இந்திய அரசியலில் உருவெடுத்திருக்கும் மிகப்பெரும் பிரச்சினை “சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்” நிறைவேற்றப்படுமா? என்பதுதான். மதவெறி பிடித்த அமைப்புகளும், அரசியலில் சுய ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் கும்பல்களும் இணைந்து இல்லாத இராமர் பாலத்திற்காக இந்தியாவில் ஆங்காங்கே வன்முறைகளை ஏற்படுத்தி வருகின்றனர். சேது சமுத்திரத்திட்டத்தில் ஒரு பகுதியில் அகற்றப்படும் சுண்ணாம்புப் பாறைகள் ராமர் கட்டிய பாலம் என்றும் அதை தேசியச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் கருத்துக்களை வைக்கின்றனர். இத்திட்டம் இந்துக்கள் …

Read More »

செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…

1069. என் நண்பர்கள் என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் – உஸ்ராப் போரே தபூக் போராகும் – அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு …

Read More »

எல்லோரும் கொண்டாடுவோம்…!

புத்தாண்டைக் கொண்டாட தயாராக இருப்பீர்கள்.ஆண்டு முழுவதும் மாடாய் உழைத்துவிட்டு நல்ல/கெட்டபடியாகக் கழிந்த 2007 ஐ வழியனுப்பும் விதமாக நள்ளிரவு 11:59 ஐ ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறீர்கள். இதோ இன்னும் சில நிமிடங்களில் நம்முடன் இருந்த 365 முழு நாட்களுக்கு விடைகொடுத்து அடுத்த _?_ நாட்களை எதிர் நோக்கி இருக்கிறோம். 2007 ஆம் ஆண்டின் பரவசத்துடன் திக்… திக்..இதயத்துடன் நிசப்தமான நிமிடங்களுக்காக காத்திருப்பவர்களின் சிந்தனைக்கு! இந்த வருடம் பதில் சொல்லா …

Read More »

விடைபெறும் நாளில்….

இணையத்தில் சினிமா மற்றும் பொழுது போக்கு என்று சராசரித் தமிழனாக வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ்மணத்தின் அறிமுகம் கிடைத்தது. சங் பரிவாரத்தைச் சேர்ந்த சிலர் இஸ்லாத்தின் மீதும், நபிகளார் மீதும் அவதூறுகளை எழுதிக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு என் அறிவில் பட்டதை அவர்களின் பதிவுகளிலேயே பின்னூட்டமாக பதிலளித்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டங்கள் வெளியிடப்படாமை, வெளியிடுதலில் தாமதம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே தனியாக வலைப்பூ ஒன்றைத் துவங்கினேன். அவர்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கிய போது இஸ்லாத்தைப் பற்றிய …

Read More »

லாத் உஸ்ஸா மீது சத்தியம் செய்தவர்…

1068. யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்” என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 4860 அபூஹுரைரா (ரலி).

Read More »

அல்லாஹ் தவிர பிறவற்றின் மீது சத்தியம் செய்யத் தடை.

1066. (என் தந்தை) உமர் (ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை. புஹாரி :6647 இப்னு உமர் (ரலி). 1067. …

Read More »

காற்றைக் கைது செய்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ காட்டுமிராண்டி தாக்குதலில் உயிர் இழந்துள்ளார். இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இறந்த அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அரசியல் படுகொலைகள் இந்தியாவில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பாகிஸ்தானில் நடைமுறைக்கு வந்துவிட்டது. என்றாலும் இம்முறை சோகம் அதிகமாவே இருக்கிறது. கொல்லப்பட்டிருப்பவர் ஒரு பெண் என்பது மட்டுமே இதறக்குக் காரணம் அல்ல. ஏற்கனவே தனது தந்தையை அரசியல் படுகொலையில் பலிகொடுத்தவர்; முஸ்லிம் பெண்கள் அடக்கி …

Read More »

கஃபாவுக்கு நடந்து செல்ல நேர்ச்சை.

1064. ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள், நபி (ஸல்) அவர்கள் ‘இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் …

Read More »

இறைவன் கொடியவனா?

புதியபறவை படம் என்று நினைக்கிறேன். அதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “எங்கே நிம்மதி?” எனத்தொடங்கும் பாடலில் “பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் எவரையும் முணுமுணுக்க வைக்கும். “அர்த்தமுள்ள இந்து மதம் ” என்று புத்தகம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் மிகுந்த இறைநம்பிக்கை உள்ளவர் என்றே நினைக்கிறேன்.(இவரின் சிந்திக்க வைக்கும் பல கவிதைகளை மதுபோதையுடனேயே எழுதுவார் என்று குற்றம் சாட்டப் …

Read More »