கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிய தமிழ் மாத இதழான ‘நம்பிக்கை’ பிப்ரவரி 05 இதழில் வெளியான தலையங்கம். சுனாமி. நமது அகராதியில் புதிதாக புகுந்துவிட்ட ஒரு சொல்.நில நடுக்கத்தால் உருவாகும் கடல் பிரளயத்தை உணர்த்தும் ஜப்பானிய வார்த்தை. உச்சரிப்பில் ஆபத்தை நுகர முடியவில்லை. அனுபவம் அவ்வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் கதிகலங்க வைக்கிறது. இந்தியப் பெருங்கடல் வட்டத்திற்குட்பட்ட நாடுகளின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புப் பேரிடர் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆங்காங்கே …
Read More »நேசகுமாரின் விளக்கங்களுக்கு பதில்!
நபிகள் நாயகம் – அன்னை ஜைனப் திருமணம் குறித்து நேசகுமார் தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். இந்த நீண்ட கடிதம் எழுதும்முன் எனது முந்திய திண்ணை கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருக்கலாம். இந்த விவாதத்தில் அவர் தரப்பு வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கின்றன. பொய்யை உண்மை என்று வாதிடுபவர்களுக்குத்தான் அதற்கான ஆதாரங்களை தெள்ளத்தெளிவாக எடுத்து வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. …
Read More »ஹதீஸ் – ஒரு சிறு விளக்கம்!
‘திண்ணை’ 20-01-05ல் வெளியான கட்டுரையின் மறுபதிவு.. நபிகள் நாயகம் அவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்ட போது அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வை ஆதாரமாக நேசகுமார் காட்டி இருந்தது உண்மைதான். அவர் ஆதாரம் தரவில்லை என்று சொன்னது என் தவறு. . பொதுவாக தான் காட்டும் ஆதாரங்களுக்கு உரிய இணைய சுட்டியையோ, குர்ஆன் வசனங்கள் / ஹதீஸ் அறிவிப்புகளின் …
Read More »இஸ்லாம் – தவறான புரிதல்களும் விரோத பிரச்சாரங்களும்!
முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடையே இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் பற்றியும் காணப்படும் தவறான கருத்துக்களுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, இஸ்லாத்தைக் குறித்தும் அதன் தாத்பர்யம், கொள்கை கோட்பாடுகளைக் குறித்தும் அவர்களுக்கு எவரும் எடுத்துச் சொல்லவில்லை; முஸ்லிம்களே சொல்ல மறந்து விட்டனர். இரண்டாவதாக, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட ஆங்கிலேயர்கள் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டு தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்து விட்டனர். அதன் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது. மூன்றாவதாக, …
Read More »22] கலீஃபா உமர்
ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638-ல். அது கலீஃபா உமரின் காலம். (இரண்டு உமர்கள் இருக்கிறார்கள். இந்த முதலாவது உமர், முகம்மது நபியுடன் நேரடியாகப் பழகியவர். அவரது தலைமைத் தளபதி போல் இருந்தவர். இரண்டாவது உமர், கி.பி. 717-ல் ஆட்சிக்கு வந்தவர். இவரும் கலீஃபாதான். ஆனால் முகம்மது நபியின் நேரடித் தோழர்கள் வரிசையில் வந்தவர் அல்லர். மாறாக, “உமையாக்கள்” என்னும் ஆட்சியாளர்களின் வழிவந்தவர்.) அதுவரை யூதர்களாலும் …
Read More »ஜிமெயில்
சோதனைச்சுற்றுக்காக கூகில் (Google) நிறுவனம் அளிக்கும் இலவச ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் கணக்கை, மற்ற இலவச மின்னஞ்சல்களைப் போல் பெற்றுவிட முடியாது. தற்போது ஜிமெயிலை உபயோகிக்கும் ஒருவர் உங்களுக்கு அழைப்பு (Invitation) கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு அழைப்பு கொடுப்பதற்கான தகுதியும் அவர் பெற்றிருக்க வேண்டும். பிளாக்கர் (blogger.com) தளத்தில் வலைப்பதிவு கணக்கு இருந்து, அதில் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தினால், நான்கிலிருந்து ஐம்பது அழைப்புத் தகுதிகள் …
Read More »21] இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்
முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கை வெளியானபோது, அதனை மனப்பூர்வமாக ஏற்பதாகச் சொல்லித்தான் யூதர்களும் தம்மை மதினாவின் இஸ்லாமிய அரசுக்கு உட்பட்ட குடிமக்களாக அறிவித்துக்கொண்டார்கள். ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தில் குறிப்பாக முகம்மது வாழ்ந்த காலத்தில் இஸ்லாத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஏராளமான கலகங்களுக்கும், ஒரு சில யுத்தங்களுக்கும் மறைமுகத் தூண்டுதல்கள் அவர்களிடமிருந்தே வந்ததாகச் சரித்திரம் சொல்கிறது. யுத்தம் என்று வரும்போது, ஒப்பந்தப்படி யூதர்கள் முஸ்லிம்களை ஆதரித்தாகவேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் யூதர்கள் …
Read More »புத்தகக் கண்காட்சி, சென்னை
நேற்றைய பதிவு, இது காணவில்லை என்பதால் மீண்டும்… 2005 மார்ச் மாதம் இறுதியில் எடுக்க வேண்டிய விடுமுறையை, 2005 ஜனவரி 16ந் தேதியில் பெற்றுக் கொண்டு ஜனவரி 17ந் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கினேன். குடி புகலை முடித்து, பின் சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறி வாடகை வாகனத்தில் எழும்பூர் வந்து வழக்கமாகத் தங்கும் விடுதியில் தங்கினேன். மாலை …
Read More »சென்னைப் புத்தகக் கண்காட்சி
2005 மார்ச் மாதம் இறுதியில் எடுக்க வேண்டிய விடுமுறையை, 2005 ஜனவரி 16ந் தேதியில் பெற்றுக் கொண்டு ஜனவரி 17ந் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கினேன். குடி புகலை முடித்து, பின் சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறி வாடகை வாகனத்தில் எழும்பூர் வந்து வழக்கமாகத் தங்கும் விடுதியில் தங்கினேன். மாலை 5 மணிக்கு திருநெல்வேலிக்குச் செல்ல பேருந்தில் இருக்கையை …
Read More »20] இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?
“பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது” என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது. கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.முகம்மது நபி பிறந்த சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ …
Read More »