Featured Posts

நாட்டு நடப்பு

பாவங்களை சுட்டிக் காட்டுங்கள்!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் அ இ உலமா சபை கவனத்திற்கு ! சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் மாற்று மதத்தவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடிய அமல்களோடு அவர்களின் மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து அந்நிகழ்சியில் பங்கு பெற வைத்து அழகு பார்க்கிறார்கள். பொதுவாக சகல மனிதர்களோடும் சகஜமாக இரண்டரக்கலந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு பல வழிகளில் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அந்நியர்களோடு …

Read More »

கழிவுகளால் நேரும் அழிவுகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஆசிரியர் பக்கம் உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி …

Read More »

வறிய நாடுகளை வாட்டும் டெங்கு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — ஆசிரியர் பக்கம் வறிய நாடுகளை வாட்டும் டெங்கு வரண்ட மற்றும் உலர் வெப்ப வலய நாடுகளை டெங்கு அபாயம் அச்சுறுத்தி வருகின்றது. டெங்குக் காய்ச்சல் (னுநபெரந குநஎநச) எலும்பை முறிக்கும் காய்ச்சல் (டீசநயம டீழசn குநஎநச) என்றெல்லாம் இதுஅழைக்கப்படும். இந்நோய் ஆரம்பத்தில் உயிர் கொல்லி நோயாக இலங்கையில் பார்க்கப்பட்டது. பின்னர் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் மலேரியாக் காய்ச்சல் …

Read More »

பெருகி வரும் போதைப் பாவனை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – உலக அழிவின் அடையாளங்களில் போதைப் பாவனை பெருகுவதும் ஒன்றாகும். அதை நாம் இன்று நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். ஆரம்ப காலத்தில் சாராயம், கள் என்றிருந்த போதை இன்று பல்வேறு வடிவம் பெற்று புதுப்புது வடிவங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது. திடீர் பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை அதற்கான இலகுவான வழியாகப் பார்க்கின்றனர். …

Read More »

ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஆசிரியர் பக்கம் ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும், காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் …

Read More »

மஸ்ஜித் இமாம்களின் அவல நிலை

இஷாவுக்கு பிறகு பயான் முடித்துவிட்டு பள்ளிக்கு வெளியே உள்ள சீமெந்து பென்ஞ்சில் வந்தமர்கிறார் ஹஸ்ரத். பயான் தொடர்பான ஒரு சந்தேகம் தீரவேண்டி இருந்ததால் நானும் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். சந்தேகம் தீர்ந்தது. அதன் பின்னர் பொதுவான உரையாடல் தொடர்ந்தது….. ஆனாலும் அவருக்குள் ஒரு தேக்க நிலையினை உணர்ந்தேன். வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு பஸாருக்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதில்தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை உணரமுடிந்தது. இந்த பள்ளிக்கு வந்த …

Read More »

எழுச்சியுற்ற ஜல்லிகட்டு

கடந்த வாரங்களில் தென்னிந்தியாவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அனைவரின் பார்வையையும் தமிழ்நாட்டை நோக்கி குவியச்செய்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பண்டைக்கால இந்துத் தமிழர்களின் பண்பாட்டுத் தளமாகக் கருதப்படுகின்ற மதுரையிலுள்ள அலங்காநல்லூரில் சிறு குழுவின் பங்குபற்றலுடன் சாதாரணமாக ஆரம்பமான ஜல்லிக்கட்டுத் தடைக்கான எதிர்ப்புப் போராட்டம், மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரையும் பங்குபற்றச் செய்து, முக்கிய நகரங்களுக்கும் பரவி, ஜாதிய்ய வேறுபாட்டை மறக்கச் செய்து, தமிழகத்தையும் கடந்து …

Read More »

இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும்

எஸ். ஹுஸ்னி ஸலபி (B.A. (Cey) (விரிவுரையாளர்: தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்) இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். பல்வேறு இனக் குழுமங்களும், மதக் கோட்பாடுகளும் வாழும் பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு இனமும் வித்தியாசப்பட்ட விகிதாசாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மையினமாக பௌத்தர்கள் வாழும் அதேவேளை, இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இங்கு ஜீவிக்கின்றனர். மத, கலாசார, பண்பாட்டு வித்தியாசங்கள் பாரியளவில் இருந்தாலும் இலங்கையர்கள் என்ற தாயக உணர்வு அனைவரின் …

Read More »

இனவாதம் தீய சக்திகளின் சுயலாபம்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இலங்கை ஓர் எழில் கொஞ்சும் நாடு! இயற்கை வளம் மிக்க தேசம்! அதில் வாழும் மக்களும் நல்லவர்கள்! வளர்முக நாடுகளில் கல்வியறிவு அதிகம் கொண்ட நாடு நமது நாடாகும். இப்படியான இந்நாட்டு மக்களிடம் இயற்கையிலேயே பல நல்ல குணாம்சங்கள் உள்ளன. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் இலங்கையர்கள் உன்னதமானவர்கள் என்று ஆணித்தரமாகக் கூறலாம். ஒரு …

Read More »

இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில்

இலங்கையில் மீண்டும் இனவாதப் பேய் தனது கோர முகத்தை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. இந்த இனவாதப் பேய்களுக்குப் பின்னால் அரசியல் அரக்கர்கள் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்த பெரும்பான்மை சமூகத்தாலும், இனவாதத்தை எதிர்த்த தமிழ் முஸ்லிம் சமூகங்களினாலும் இலங்கையில் ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இனவாதத்தால் இழந்த அரசியல் பலத்தை அதே இனவாதத்தைப் பயன்படுத்தியே மீண்டும் கையில் எடுக்க ஒரு கூட்டம் முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் அச்சம் …

Read More »