எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) தனிமனித சீர்திருத்தம்: அன்றைய அரேபியாவின் சூழலில் ஒட்டுமொத்த சமூகம் தீமையில் திளைத்திருந்தனால், இமாமவர்கள் தனிமனிதர்களை அணுகி, தனது பிரசாரத்தை முன்வைத்தார்கள். ஏற்றுக்கொண்டவர்களுக்கு இஸ்லாத்தை ஆழமாகக் கற்றுக்கொடுத்து, சமூக உருவாக்கத்திற்காகத் தயார்படுத்தினார்கள். இதனால், இமாமவர்களின் பிரசாரம் பயனளிக்க ஆரம்பித்தது. உயைய்னாவில் மேற்கொண்ட பிரசாரத்தால், அவரை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் இஸ்லாமிய உணர்வுடனும் உணிர்த்துடிப்புடனும் காணப்பட்டனர். பின்னர் ஹூரைமலாவிலும் அவரது பிரசாரத்தில் கவரப்பட்ட இளைஞர் கூட்டமொன்று உருவானது. அத்தோடு, மக்கா …
Read More »அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)
கொரோனா வைரஸை பொறுமையுடன் எதிர்கொள்வோம் !
முழு உலகையும் சூழ்ந்து பரவி அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்றுவரை 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இலட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் நொந்திருக்கின்றார்கள்.
Read More »முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 2
எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) சீர்திருத்தப் பணிகள் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் (கி.பி1703) உயைய்னா என்ற பாலைவனக் கிராமத்தில் பிறந்தார்கள். இவர் அன்றைய அரேபியாவில் புகழ் பெற்ற பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவராவார். இவரின் பாட்டனார், சுலைமான் இப்னு அலி உயைய்னா நீதவானா(காழியா)கவும் நஜ்த் மாகாணத்தின் ஷெய்குல் இஸ்லாமாகவும் இருந்தார். முஹம்மதின் தந்தை ஷெய்க் அப்துல் வஹ்ஹாப் உலமாவாகவும் உள்ளுர் காழியாக(நீதவானா)வும் விளங்கினார். இமாம் …
Read More »முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 1
எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான ஓர் நல்லறிஞர். அவர், அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் முஸ்லிம் சமூகப் புனர் நிர்மாணத்தை மிகப் பெரும் தியாகத்துடன் மேற்கொண்டார். முஹம்மத் என்பது அவரது இயற் பெயர். அப்துல் வஹ்ஹாப் என்பது அவரது தந்தையின் பெயர். எனினும், அல்குர்ஆன் – சுன்னாவின் பரம எதிரிகள், தந்தையின் பெயரில் அவரை அப்துல் வஹ்ஹாப் …
Read More »பல்கலைக்கழகங்களைப் பலிபீடமாக்கும் பகிடிவதை – நூல் அறிமுகம்
A.H. அப்துல்லாஹ் அஸாம் சமூகத்திற்கு மத்தியில் பெரும் அதிர்வுகளைத் தோற்றுவித்துள்ள பகிடிவதை தொடர்பாக எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)அவர்களினால் பல்கலைக்கழகங்களைப் பலிபீடமாக்கும் பகிடிவதை என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பை ஹம்னா பதிப்பகம் 2020 மார்ச் மாதம் துவக்கத்தில் வெளியிட்டுள்ளது. பல தசாப்தகாலமாகத் தடுக்க முடியாமல் தொடரும் இவ்வன்கொடுமை தொடர்பில் பெற்றோரும், புதுமுக மாணவர்களும், நாடும் அதிர்ச்சியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், பல்வேறு விளைவுகளைத் தோற்றுவித்து, தற்போது பேசுபொருளாகியுள்ள இப்பிரச்சினை …
Read More »நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 03
M.A.Hafeel Salafi (M.A) நன்றி மறப்பது நன்றன்று ஓர் அடியான் நன்றி தெரிவிப்பதன் ஊடாக, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் அன்பையும் நிறைவாகப் பெற்றுக் கொள்கின்றான். மனிதனுக்கு அவனை சிருஷ்டித்து, செம்மைப்படுத்திய இரட்சகனினால் அருளப்பட்டுள்ள அருட்கொடைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அவைகளை மேலும் அதிகமாகப் பெற்றுக் கொள்வதற்கும் நன்றியுணர்வும் அதன் வெளிப்பாடும் காரணமாய் அமைகிறது. அல்லாஹ் தேவையற்றவன் என்பதால் அவனிடமிருந்து கிடைக்கும் நிறைவான அருளுக்குப் பதிலீடாக மனிதனால் நன்றி செலுத்துவதைத் தவிர வேறு எதுவும் …
Read More »நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 02
M.A.Hafeel Salafi (M.A) தொடர் – 02 எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன். மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். மனிதனின் கற்பனைகளில் கற்பிதம் செய்ய முடியாத அளவு அல்லாஹ் மனிதனுக்குப் பல்வேறு அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றிற்காக மனிதன் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவற்றிற் சில அருட்கொடைகளை நோக்குவோம். நேர்வழியைக் காட்டியதற்காக நன்றி: ஒரு மனிதனால் பிற மனிதனுக்கு வழிகாட்ட முடியாது. இறை வழிகாட்டலான …
Read More »அஸ்மீர் சிந்திய செங்குறுதிச் சொட்டுக்கள்
அரபுமூலம்: பேராசிரியர் அவ்ரகான் முஹம்மது அலி தமிழில்: எம்.ஏ. ஹபீழ் ஸலபி அது, 1919ம் ஆண்டு மார்ச் திங்கள் அஸ்மீர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு…. உஸ்மானிய சாம்ராஜ்யம் முதலாம் உலக மகாயுத்தத்தில் மிக மோசமான முறையில் தோல்வியுற்று, பலமிழந்து காணப்பட்டது. இவ்யுத்தத்தால் இலட்சக்கணக்கான இளம் துடிப்புள்ள வாலிபர்களையும் இழந்தது. இப்போரில் பங்குகொள்வதற்கு உஸ்மானிய சாம்ராஜ்யம் பொருளாதார, அரசியல் இராணுவ ரீதியான முன் ஆயத்தம் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. இப்போரில் கலந்துகொள்வதற்கு …
Read More »நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 01
M.A.Hafeel Salafi (M.A) நன்றி நவிலும் நாகரிகப் பண்பியல்பு, மனிதர்களுக்கு பிறப்பியல்பிலேயே இருக்கும் ஓர் உள்ளார்ந்த உணர்ச்சியாகும். அது ஒரு நாகரிக முதிர்ச்சியுள்ள, ஒழுக்கமிக்க பண்பாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு முஃமினின் வாழ்வில் நன்றியுணர்வு ஈமானின் அடையாளத்தையும் இஸ்லாமிய பண்பியல் அழகையும் பிரதிபலிக்கிறது. அத்தோடு, அவனில் வெளிப்படும் நன்றியுணர்ச்சி, அளவற்ற அருளாளன் அல்லாஹ்வையும் அவன் அள்ளி வழங்கியுள்ள அருட்கொடைகளையும் உளமாற ஏற்றுக் கொள்வதையும் அதைப் பகிரங்கப்படுத்துவதையும் வெளிப்படுத்துகிறது. ‘உமது இரட்சகனின் அருட்கொடையை …
Read More »எழுவரில் ஒருவனாக இரு – ஹதீஸ் தெளிவுரை
மறுமை நாளில், மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான். அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது.
Read More »