Featured Posts

பொதுவானவை

தாஃவா எனும் சத்தியம் பிரச்சாரத்தின் இலக்கணத்தை விளங்காத சில தாயீக்களுக்கு ஓர் விளக்கம்!

வெற்றியாளர்களின் இலக்கணம்: 1) கல்வி கற்றல் 2) அமல் செய்தல் 3) சத்தியத்தை போதித்தல் 4) பொறுமை காத்தல் இந்த நான்கு நிபந்தனைகளை தான் பாக்கியவான்களின் பண்புகளாக இருக்க வேண்டும் என்று ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் கூறுகிறான்(சூரா அஸ்ர்). அல்லாஹ் கூறும் வரிசையும் முக்கியம். கல்வியை கற்று தான் அமல் செய்ய வேண்டும் பின்பு தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த வரிசையை மாற்றி செய்தாலும் முழுமையான பாக்கியவானாக முடியாது. …

Read More »

[003] அவளது தினக்குறிப்பேட்டிலிருந்து…

சிலர் தனது கடந்தகால வாழ்வில் ஏற்பட்ட வேதனைகளுக்கெல்லாம் தன்னுடன் இருந்த உறவுகளே காரணம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு அவர்களைக் குத்தல் செய்யும் விதமாய் பேசுவதும், நடந்து கொள்வதும் அநேகமான வீடுகளில் நடந்தேறிக் கொண்டுதானிருக்கிறன. அந்தக் குத்தல் வார்த்தைகளை வாங்கிக்கொள்ளும் உறவுகள், அவர்களை சேர்ந்து நடக்கவும் முடியாமல், விலகிச் செல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு நடந்து தன்னை வெறுப்போடு நோக்கும் உறவொன்றினை தியாகத் திருநாளன்று சந்திக்க வாய்ப்பிருந்தும், அவரது மகிழ்ச்சி தன்னால் …

Read More »

அஸர் தொழுகையை விட்டுவிடுகிறவரின் அமல்கள் அழிந்துவிடும்- என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா?

மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்கள்- தொடர் உரை 7!!! உரையில் பேசப்பட்ட ஹதீஸ்:-?? அபுல் மலீஹ் அறிவித்தார். மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்’ என்று குறிப்பிட்டார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள் அபுல் …

Read More »

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 077]

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! ஸூfபித்துவ அறிஞர், முஹம்மத் பின் அல்fபழ்ல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுவதாக அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் நான்கு தரப்பினரிடம் இருக்கின்றபோது, இஸ்லாம் (மதிப்பிழந்து) போய் விடுகின்றது…. அறிந்ததைக்கொண்டு செயல்படாதவர்கள். அறியாததை வைத்து செயல்படுகின்றவர்கள். செயல்படாமலும், அறிந்து கொள்ளாமலும் இருப்பவர்கள். அறிவைத் தேடும் மக்களைத் தடுப்பவர்கள்!”. இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதை இவ்வாறு விளக்கப்படுத்திக் கூறுகின்றார்கள்: முதலாம் …

Read More »

ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாது எச்சரிக்கையாக இருப்போம்! [உங்கள் சிந்தனைக்கு… – 076]

ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாது எச்சரிக்கையாக இருப்போம்! அஷ்ஷெய்க் சஈத் அப்துல் அழீம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- ஒவ்வொரு முஸ்லிமும் தான் நோற்றிருக்கும் நோன்பு பாழாகாமல் இருக்கவும், வெறுமனே பசித்திருந்து தாகித்திருந்ததே தனக்கான பங்கு என்றில்லாதிருக்கவும் மனித மற்றும் ஜின் இன ஷைத்தான்களின் தவறான ஊசலாட்டங்களிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அல்லாஹ்வின் அடியார்களை ஏமாற்றுகின்ற விடயத்தில் ஷைத்தான் பல வழிகளால் வருவான். “எனது இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு …

Read More »

தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரையும்… பெண்களுக்கான முகத்திரையும்…

நாம் வாழும் ஊரிலே மஹல்லாவிலே இப்பிரச்சனை ஏற்பட்டதாலே இதற்கான மார்க்க நிலைபாட்டை இரு சாராரின் கருத்தையும் கேட்டபின் முன்வைக்கிறோம். இந்த மார்க்க கட்டுரையின் முடிவில் தான் என்னவெல்லாம் ஆதாரத்தோடு சொல்லப்பட்டு நிருவப்பட்டுள்ளது என்பது வாசகர்களுக்கு முழுவதுமாக புரியும். இரட்சகன் இதற்கான முழு கூலியையும் தருவானாக! இது இறைச்செய்தி சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளதால் இதை எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபியின் பெயர் இக்கட்டுரை …

Read More »

சுவனத்தை பெற்று தரும் நற்குணம்

பொதுவாக மனிதனின் குணங்கள் இரண்டு வகைப்படும். 1- நற்குணம். 2- தீய குணம். எல்லா மனிதனிடமும் நற்குணம் சார்ந்த சில பண்புகளும், தீய குணம் சார்ந்த சில பண்புகளும் இருக்கவே செய்கின்றன. நற்குணம் சார்ந்தவை: பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, விட்டுக்கொடுத்தல், தயாளம், நாணம், மென்மை, வீரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தீய குணம் சார்ந்தவை: கோபம், பதட்டம், பெருமை, கஞ்சத்தனம், கடுமைத்தன்மை, கோழைத்தனம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தீய குணங்களை நற்குணங்களாக மாற்றி …

Read More »

சிறந்த நல்லறம் எது?

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நிச்சயமாக நீங்கள் மார்க்கச் சட்ட நிபுணர்கள் அதிகமாகவும் உரை நிகழ்த்துபவர்கள் குறைவாகவும், யாசகம் கேட்பவர்கள் குறைவாகவும் கொடுப்பவர்கள் அதிகமாகவும் உள்ள காலத்தில் இருக்கிறீர்கள். அதில் நல்லறம் செய்வது மனோ இச்சையை வழிநடத்தும். உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும் அக்காலத்தில் சட்ட நிபுணர்கள் குறைவாகவும், உரை நிகழ்த்துபவர்கள் அதிகமாகவும், யாசிப்பவர்கள் அதிகமாகவும் கொடுப்பவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். அதில் மனோ இச்சை நல்லறம் …

Read More »

போன நோன்புக்குள்ள…

தலைப்பிறை கண்டுட்டாங்களாம். பள்ளியில சொன்னாங்க, காதுல கேட்டிச்சி, நோன்பு மணத்திச்சி, சைத்தான்கள் விலங்கிடப்படுமாமே இனியென்ன பயமென்று சிலர் சாமத்திலும் விளையாடினோம், ஜும்ஆவுல சொன்னாங்க நேற்று றமளானின் பொழுதுகள் மகத்துவமானதென்று. எம் இறைவா! இந்த றமளானிலாவது சாமத்திலும் அமல் செய்யும் பாக்கியம் தருவாய்! நித்திரை தோய்ந்த கண்ணுடன் ஸஹர் செய்து தூங்கினால், சிலர் ளுஹறுக்குத்தான் விழித்த ஞாபகம் ஜும்ஆவுல சொன்னாங்க நேற்று றமளானில் செய்யும் அமல்களுக்கு கூலி அதிகமாம் எம் இறைவா! …

Read More »

அந்நியனும் – வழிப்போக்கனும்

அந்நியனும் – வழிப்போக்கனும் அந்நியன், வழிப்போக்கன், நாடோடி இவர்களெல்லாம் யார் என்று இன்றய (youth) இளைஞர்களிடம் கேட்டால் சற்றும் தாமதிக்காமல் உடனே சொல்லுவார்கள் இது அனைத்தும் சினிமாவின் தலைப்பு என்று. சிலர் அந்நியன், வழிப்போக்கன், நாடோடி என்றெல்லாம் சொல்லக்கேட்டிருப்பர். ஆனால் அவர்களின் வாழ்வின் நிலைகள் என்ன என்பதை அறியாமலிருக்கலாம். தன் சொந்த நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு குடியேறியவனைத்தான் ”அந்நியன்” என்று சொல்லப்படும். அறிமுகமில்லாத அந்நிய பூமியில் வசிப்பவன், அந்த பூமிக்குச் …

Read More »