Featured Posts

Daily Archives: May 24, 2005

வணிகம் என்றொரு வணக்கம்!

மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழில், வணிகம், உத்தியோகம் ஆகியவை பொருளீட்ட நாம் மேற்கொள்ளும் சில வழிமுறைகள். இம்மூன்றில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கிறது. சிலவற்றில் அதிகம் கிடைக்கும். சிலவற்றில் குறிப்பிட்ட தொகையே கிடைக்கும். சிலவற்றில் சில நேரங்களில் நட்டம் கூட ஏற்படலாம். வருமானம் பெற்றுத்தரும் வழிமுறைகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் இவற்றுக்கிடையில் வேறு வித்தியாசங்கள் அதிகம் …

Read More »

இஸ்லாம் குறித்த விவாதங்கள்!

இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. ‘இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?’ என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான …

Read More »

சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?

கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43) “…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7) “உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம் ஆக்கினோமா? (என்று)”. (43:45)

Read More »

53] ஹிட்லரின் தற்கொலை

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 53 ஜெர்மனியில் ஹிட்லரின் ராஜாங்கம் ஆரம்பமானதிலிருந்து, அவரது மறைவை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்த இரண்டாம் உலக யுத்தம் வரை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமானால், அதற்கு ஏராளமான சுவாரசியமான புத்தகங்கள் இருக்கின்றன. வில்லியம் ஷிரரின் The Rise and Fall of the Third Riech படித்துப் பாருங்கள். ஒரு திரைப்படம் பார்ப்பது போலவே இருக்கும். ஹிட்லரின் யூதப் படுகொலைகள், அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் …

Read More »

52] இரண்டாவது மிகப்பெரிய தவறு

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 52 இரண்டாம் உலகப்போரின் சூடு, ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கிக்கொண்டிருந்த நேரம். ஐரோப்பா தொடங்கி ஆப்பிரிக்கா வரை யுத்தத்தின் சத்தம் மிகப் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள் அந்த நேரத்தில் சற்று மெதுவாகவே மக்களுக்குத் தெரியவந்தன. யூதர்கள் மட்டும் தாம் வாழும் தேசங்களில் ஹிட்லருக்கு எதிரான போராட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம் என்று அமர்க்களப்படுத்தி விஷயத்தை அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டிராவிட்டால், ஒருவேளை இன்றைக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச …

Read More »