Featured Posts

Recent Posts

3.கல்வியின் சிறப்பு

பாகம் 1, அத்தியாயம் 3, எண் 57 ‘நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்”ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். பாகம் 1, அத்தியாயம் 3, எண் 58 (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘புதிய …

Read More »

2.ஈமான் எனும் இறைநம்பிக்கை

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 8 ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 1, அத்தியாயம் 2, எண் 9 ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை …

Read More »

1. இறைச்செய்தியின் ஆரம்பம்

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1 ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

Read More »

ஸஹீஹுல் புகாரி நபிமொழித் தொகுப்பு – நூல் அறிமுகம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… ஸஹீஹுல் புகாரி என்றழைக்கப்படும் இந்த நபிமொழித் தொகுப்பில், சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள, சொல், செயல் ஆகியவற்றின் தொகுப்பையே ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவரான இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் பெரும் …

Read More »

தானம் செய்பவன், கஞ்சனின் உதாரணம்.

600.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும்பாலான நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களின் மார்புபகுதி கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரின் நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் பாதச் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ அவனுடைய நீளங்கி அவனை …

Read More »

அல்லாஹ்வை நெருங்குவது எப்படி?

அல்லாஹ்வை நெருங்குவது எப்படி? 2006-ஆம் வருட ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – வழங்குபவர்: கோவை அய்யூப்

Read More »

தானங்களில் சிறந்தது.

599.பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அதிகப் பால்தரும் ஆடும் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 2629 அபூஹுரைரா (ரலி)

Read More »

உழைத்து தானம் செய்தல்.

598.தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப் (ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள், ‘(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டு வந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக்கொண்டு வந்திருக்கிறார்” என்று …

Read More »

தானத்தால் நரக நெருப்பிலிருந்து..

596.”பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1417 அதீ இப்னு ஹாத்திம் (ரலி) 597.அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தம(து முகத்து)க்கு எதிரே பார்ப்பார். …

Read More »