இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 …
Read More »நாட்டு நடப்பு
எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன?
இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர் எமது பொருளாதாரத்தினதும் இருப்பினதும் முதுகெலும்பாக வியாபாரம் பார்க்கப்படுகின்றது. அந்த முதுகெலும்பை முறித்துவிட்டால் முதுகெலும்பு முறிந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். இது ஆபத்தான நிலையாகும். இனவாத சிந்தனைகள் கிளரப்படுகின்றது. ஒரு சமூக சு+ழலில் மற்ற சமூகங்களில் தங்கி வாழும் பொருளாதார அடித்தளத்தில் எமது சமூகத்தின் அத்திரவாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வர்த்தகம் என்பது விற்றல்-வாங்குதல் என்ற இரு பக்கங்களைக் கொண்டது. வாங்குவதை நிறுத்திவிட்டால் அல்லது …
Read More »விழி இழந்த பின் விளக்கெதற்கு…
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்’ முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு …
Read More »லவ் ஜிகாத் என்பது கண்டறிய முடியாத பொய் குற்றச்சாட்டு… முடித்து வைத்தது என்ஐஏ…
-அத்தேஷ் நன்றி மக்கள் உரிமை வார இதழ். இந்தியாவில் எங்கேயும் தேடியும் லவ் ஜிகாத் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி இது மாதிரி வழக்குகளை விசாரணை செய்ய மத்திய அரசு உருவாக்கிய என்.ஐ.ஏ என்ற நிறுவனம் கோப்புகளை மூடிவிட்டது. ஆணோ பெண்ணோ மதம் மாறி திருமணம் செய்து கொள்வது நடக்கவே செய்கிறது. அதிலும் பெரிய கிரிமினல் குற்றங்கள் காணப்படவில்லை என்கிறது என்.ஐ.ஏ. இது தொடர்பில் மேலும் ஏதேனும் கோப்புகளை …
Read More »பொது சிவில் சட்டம் இப்போது தேவையில்லை
பொதுசிவில் சட்டம் இப்போது தேவையில்லை; சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தது சட்ட ஆணையம். -அத்தேஷ் ஜி 2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு தங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராயும் படி, 21 வது சட்ட ஆணையத்தை 2016, ஜூன் 17 ஆம் தேதி மோடி அரசு கேட்டுக்கொண்டது. …
Read More »கூரையை எரித்து குளிர் காய முடியாது
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஆசிரியர் பக்கம் – May 2018 ‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்) எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் …
Read More »சிதைக்கப்பட்ட காஷ்மீர் ரோஜா (ஓ… மை டியர் ஆசிஃபா)
கட்டுரை ஆசிரியர்: சையத் உஸ்மான் ஜனவரி 10, 2018 அன்று ஆசிஃபா பானு, தன் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். ஜனவரி 12, 2018 அன்று காவல்துறையிடம் புகார் அளித்த பெற்றோர், அப்பகுதியில் இருந்த சஞ்சீவ் ராமின் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். அந்த புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்கு சென்று காவல்துறை …
Read More »உலமா சபை மௌனம் காப்பது ஏன்?
இலங்கை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்ன கும்பர பகுதியில் உள்ள மஸ்ஜிதில் பௌத்த மத குருமார்கள் அடங்கிய குழுவினரை பள்ளி நிர்வாகம் பள்ளிக்குள் வரவழைத்து பன, பிரீத் போன்ற அவர்களின் ஷிர்க்கான வணக்க வழிபாடுகளை கச்சிதமாக செய்யக் கூடிய காட்சிகளை முஸ்லிம் உலகமே பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியது. சாதாரண பொதுமகன் முதல் படித்தவர்கள் வரை காரி துப்பக் கூடிய அளவிற்கு பகிரங்கமாக ஷிர்க் என்ற பாவத்தை அல்லாஹ்வுடைய பள்ளிக்குள் அந்த பள்ளி …
Read More »முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித தேரர் கற்பிக்கும் காரணங்கள்
இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கயும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின” சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித …
Read More »கண்டிக் கலவரத்தின் பின்னணி
கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இலங்கையின் அரசியல் பின்னணி: இலங்கையின் உள்ளாட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளாட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது. இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. …
Read More »