Featured Posts

பர்சானா றியாஸ்

பெருநாளும் நானும்

நோன்புப் பெருநாள் எனக்கு சிறிய சோதனையுடனேயே கடந்துபோனது. பெருநாளைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கால் பெருவிரலில் ஏற்பட்டிருந்த சிறிய சிரங்கொன்று வேலைப்பழுக்களால் வீக்கமுற்று வீட்டு வைத்தியத்திற்கும் அடங்காத வகுதிக்குள் முன்னேறியிருந்தது. அது ஒருபுறம் இருக்க, பெருநாள் தொழுகைக்கிடையில் பித்ராவைக் கொடுத்து நோன்பை வழியனுப்பும் முக்கிய கடமை அனைவருக்கும் காத்திருந்தது. வீட்டிலுள்ளவர்கள் சார்பாக, தேவையான அரிசியினை மனக்கணக்கிட்டு தானே அளந்து ஏழைகளுக்கு கொடுத்துவிடுவது எனது தாயின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், …

Read More »

காரியாலயமும் நானும்

அன்று காரியாலயத்தில் பொதுமக்கள் தினம் என்பதனால் பொறுப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. காலை 9.00 மணியுடன் ஆரம்பித்த வேலைகள் பகற்பொழுதைக் கடந்த பின்னர்தான் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்த நேரம் பார்த்து லுஹருடைய தொழுகையை முடித்துக் கொள்ள எண்ணி வுழு செய்துவிட்டு, தொழுகையறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போது, என்னை நோக்கி அவசரமாக அங்கு வந்த ஒரு பொதுமகன் வயதான தாயுடன் வந்ததாகவும், தனது வேலையை அவசரமாக முடித்து தரும்படியும் …

Read More »

அவனது அருளுக்காய்

அண்மையில் ஊரில் நிகழ்ந்த இளம் பெண்ணொருவரின் மரணம் என்னையும் பாதித்திருந்தது. அவர் சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவியிருந்தார். வைத்தியர்கள் மூலம் தனது இறுதிமூச்சு நெருங்குவதை அறிந்திருந்த அப்பெண் ஆத்மீக ரீதியாக ஏற்கெனவே பண்பட்டவராயினும் தன்னை அதில் மேலும் ஈடுபடுத்தியதோடு, தான் நினைத்த எல்லைவரை இறை திருப்திக்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த முயற்சியின் உச்சமாக புனித உம்றாக் வணக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார். எதிர்வு கூறியபடியே …

Read More »

படிப்பினை

ஊரில் பிரதான பாதை விஸ்தரிப்பு வேலைகள் துரிதமாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் அதற்குத் தடையாக அமைந்திருந்த வேலிகள், கட்டிடங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருந்தன. இவ்வேளையில், நீண்டகாலமாக பாதையோரமாய் நின்றிருந்த பருத்த மரமொன்றினையும் பாதை விஸ்தரிப்பிற்காக அகற்ற வேண்டியதாயிற்று. எனவே, ஒப்பந்தகாரர்கள் அதை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால், அதனை நட்டு பராமரித்து அதன் பக்கத்திலேயே வசித்து வந்த ஒரு பொதுமகன், அந்த மரம் வெட்டப்படுவதைத் …

Read More »

ஆடையுலகில் நாம்

சிகிச்சைக்காக அறையினுள்ளே நுழைந்த அந்த முஸ்லிம் பெண் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது, தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அத்துடன், தனது மேலங்கியினால் ஒருபக்க கையை மூடுவதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதையும் அவதானித்தேன். அப்பெண் எனக்கு அறிமுகமற்றவராக இருந்தமையினால் ஒரு புன்னகையுடன் கடந்து விட்டார். அது மாவட்ட வைத்தியசாலை என்பதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் தாதியர்களுமே அதிகம்பேர் இருந்தார்கள். நானும் ஒரு சேவை நாடியாக அங்கே காத்திருப்பு வரிசையில் உட்கார்ந்திருந்த பொழுதில்தான் …

Read More »

கணவருக்கு ஒரு தூது

தன் மடிபூத்த பூவுக்கும் வேண்டாம் இவ்வேதனை என்றென் தாய் பிரார்த்தித்தாளோ? பச்சை வீட்டில் துளிர்த்தும் நாமின்னும் பூக்கவேயில்லை அன்பே! தொட்டில் வாசனையற்ற மணவாழ்வு நம்மைச் சூழ்ந்து சுவாசிக்கின்றது புறக்கணிக்கும் திங்கள்களால் திராணியற்றுக் கிடக்கிறது என் தாய்மை மூவாறு வருடங்கள் நம்மைக் கடந்துபோன பொழுதுகள் சாட்சி நம் வாசலில் கொட்டித் துளாவப்பட்டிருக்கும் இந்த வெறுமை சாட்சி வைத்தியசாலையில் என் வயிற்றைக் கீறிய கத்திமுனையும் சாட்சி தினம் புன்னகைகள் வாங்கி வருகிறாய் என்னைச் …

Read More »

நான் வேலைக்கு போக வேண்டும்

பொம்மைகளும் பேசும் என்பதை புரிய வைத்தவன் என் பிள்ளை மேலும் பல பொம்மைக் கனவுகளுடன்தான் பிள்ளை என்னை வேலைக்கு அனுப்புகிறான் முத்தமிட்டு அவன் சிரித்தாலும், என் “மணிபேஸ்” மடிவெடித்துப் போகிறது அவனது ஏக்கங்களால் என் காரியாலயக் கோவையின் கோர்க்கப்பட்ட நாடாவுக்குள் அவனையும் சேர்த்து முடிந்தாற்போல ஒரு வலி அவனுக்கேயுரித்தான எனது பொழுதுகளை காலாவதியாக்கி விடுகிறது காரியாலயம் கடமையில் நான் காணும் மகிழ்ச்சியெல்லாம் அவனது மௌனங்களுக்குள் காணத்தே போகிறது நான் திரும்பும்வரை …

Read More »

திருமணம்

நீ இன்னார் மகனாயிருக்க நான் இன்னார் மகளாயிருக்க வாழ்த்த வந்த உறவுமிருக்க உனக்கு சொந்தமானேன் திகதியொன்றிலே என் சகோதரன் கொடுத்த பரீட்சைக் கட்டணமோ தந்தை கொடுத்த சுற்றுலாப் பணமோ நீ கொடுத்த மஹர்போல மணத்திருக்கவில்லை உன் பொறுப்பில் கைமாற்றப்பட்ட அக்கணமே நீ என் காவலனாகிவிட்ட உண்மையை உணர்ந்தேன் உனது ஆடைகொண்டு என்னைப் போர்த்திய முதற் பொழுதில்தான் என்னைக் காதலித்தேன் அன்போடு நீ ஊட்டிய ஒவ்வொரு கவளமும் தினமும் உன் வாசகியாக …

Read More »

பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?

பக்கத்து தெருவில் தனியாக வசித்து வந்த தந்தையொருவர் திடீர் மரணத்தை தழுவியிருந்தார். உயிருடன் இருக்கும்போது அவரது மனைவி பத்து வருடங்களுக்கு முன் சட்டபூர்வமாய் பிரிந்து விட்டதால் தன் பிள்ளைகளுடன் மாத்திரம் குடும்ப உறவைப் பேணி வாழ்ந்தவர் அந்த தந்தை. அவரது மையித் அவரின் புதல்வரொருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வருகை தந்திருந்த இரு பெண்மணிகள் இவ்வாறு பேசுகிறார்கள் பெண்மணி 01- மையத்த எந்நேரம் அடக்குறாம்… பெண்மணி 02- அசறோட அடக்கிருவாங்களாம்… …

Read More »

மனமிருந்தால்……

தனது சொந்த ஊரில் மார்க்க கற்கைநெறி ஒன்றை ஆரம்பித்து அதனூடாக மாணவர்களுக்கு வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த சகோதரர் ஒருவர் அதற்கான கட்டிடம் அமைப்பதற்கு இடமொன்று தேடிக்கொண்டிருந்த வேளை, அவரை நன்கு புரிந்திருந்த ஓர் ஊர் பிரமுகர் தனக்குச் சொந்தமான இடத்தினை அந்த வேலைத்திட்டத்திற்கென்றே அன்பளிப்புச் செய்திருந்தார். அதைப் பெற்றுக்கொண்ட சகோதரர் முதற்கட்டமாக எளிமையான கட்டிடம் அமைத்து கற்கைநெறியை ஆரம்பிக்கவும் செய்தார். நல்லமுறையில் இயங்கிக்கொண்டிருந்த அந்த கற்கைநெறியின் …

Read More »