– எம்.ஏ.ஹபீழ் அன்புள்ள நேயர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் இந்த நூல் பீ.ஜைனுல் ஆபிதீன் பற்றிய இரண்டாம் பாகம். அவர் தொடர்பான பல்வேறு விடயங்களை இந்நூல் சுருக்கமாக பகுப்பாய்வுக்குட்படுத்துகிறது. அவரது ஆளுமையும் சிந்தனைகளும் செல்வாக்குச் செலுத்திய பல விடயங்களை முதல் பாகத்தில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அவர் மீதுள்ள விமர்சனங்களோடு அவரது முரண்பாடுகள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவரது சில கோட்பாடுகள், இரட்டை நிலைப்பாடுகள், கடும் போக்கு இயக்கவாத சிந்தனைகள் பற்றியும் இரண்டாம் பாகம் …
Read More »அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)
பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்
உலகில் சமாதானமும் சமத்துவமும் மலர இஸ்லாம் அருமையான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் – ஒரு தந்தையின் பிள்ளைகள் என்று ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நெறியை இஸ்லாம் மிக அழுத்தமாகப் போதித்து, இன ஒற்றுமையையும் மனித சமத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.நபி (ஸல்) அவர்களின் போதனைகள் பிரதானமாக மறுமை விமோசனத்தை மையப்படுத்தி இருந்தது. ஆனால், உலகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவர்கள் தீர்க்கமான தீர்வுகளை முன்வைத்தார்கள். ‘இஸ்லாம் தனித்துவமாக …
Read More »இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஒரு சுருக்கமான பார்வை
இலங்கை முஸ்லிம்களின் வரலாறுஒரு சுருக்கமான பார்வைஅஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A)Part -1 இலங்கை வணிகச் செயற்பாட்டிற்கு தொன்மைக் காலத்திலிருந்தே புகழ்பெற்றிருந்தது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே உலக வியாபாரிகளாக இருந்தவர்களும் கடலில் ஆதிக்கம் உள்ளவர்களும் இங்கு வர்த்தகர்களாக வருகை தந்தனர். அவர்களில் கிரேக்கர்களும் அரபியர்களும் பாரசீகர்களும் மிக முக்கியமானவர்கள். கிறிஸ்துவுக்குப் பின் 4ம் நூற்றாண்டு தொடக்கம் 7ம் நூற்றாண்டு வரைக்கும் இடைப்பட்ட காலப் பிரிவில் இலங்கைத் தீவானது பாரசீகம், எதியோப்பியா, …
Read More »ஆன்மிக செழுமையும் வாழ்வியல் எளிமையும் நிறைந்த ஆளுமை அஷ்ஷைய்க் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா
இலங்கை, கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த அஷ்ஷைய்க் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்கள். மரபு சார்ந்த ஓர் அரிய ஆளுமை. கொள்கை சார்ந்த சமூக மேம்பாட்டைத் தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுத் தளத்தில், அதன் கொள்கை மீள் எழுச்சிக்கு தனது எழுத்தாலும் கற்பித்தல் செயல்பாட்டாலும் பெரும் பங்களிப்பை ஆற்றினார், இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வி, மார்க்கம் போன்ற துறைகளில் முற்போக்கற்ற பொறிமுறைக்குள் சிக்கி இருந்தது. …
Read More »ஒரு திருப்பு முனையின் புள்ளி – மர்ஹூம் முஹம்மத் காலித் முஹம்மத் ஸவாஹிர்
அஷ்ஷைய்க் M.அப்துல் ஹபீழ் (M.A) மர்ஹூம் முஹம்மத் காலித் முஹம்மத் ஸவாஹிர் அவர்கள் இலங்கை ஹெம்மாதகம – பள்ளிப்போர்வைப் பிரதேசத்தில் ஆசாரமான குடும்பத்தில் 05/06/1942ம் ஆண்டு பிறந்துள்ளார். அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் 33 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பறகஹதெனிய ஸலபிய்யாக் கலாபீடத்தில் பொதுக் கல்விக்கான அத்திபாரத்தையிட்டவர்களில் மிக முக்கியமானவர். முஹம்மத் ஸவாஹிர் அவர்கள், ஸலபிய்யாக் கலாபீடத்திலிருந்து முதலாவதாகப் பேராதனைப் பல்கலைகழகம் சென்று, கலைமாணிப் பட்டம் பெற்று, கல்விப் பயணத்தில் உயர் …
Read More »ஆண் பெண் நட்பு – ஒரு சமூகவியல் பார்வை
அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A) மனித வாழ்வில் நிழல் போல் தொடரும் நட்புக்கு இஸ்லாம் வரைவிலக்கணம் வகுத்துள்ளது. அது, நட்பின் மகிமைப் பற்றி அதிகம் பேசியுள்ளது. போலி நட்புத் தொடர்பாகவும் எச்சரித்துள்ளது. ஆண் – பெண் இருபாலாரும் நட்புப் பாராட்டமுடியுமா? இனக் கவர்ச்சியில் ஏற்படும் நட்பினால் ஏற்படும் பாதகங்கள் என்ன? காதலர் தினத்தால் ஏற்படும் விளைவுகள் எத்தகையது? என்பன போன்ற விடயங்களை சமூக நடைமுறையின் பகைப் புலனில் நட்புப் …
Read More »தொழுகையின் உயிரோட்டத்தைப் பா(தி)ழாக்கும் உடைகள்
அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A) தொழுகை என்பது ஒரு முஃமினின் அல்லாஹ்வுடன் உரையாடும் ஓர் உன்னத வணக்கமாகும். நம்மைப் படைத்து, பரிபாலித்து, அருள்புரியும் அல்லாஹ்வின் இல்லமான பள்ளிக்குச் செல்லும் போது, ஆடை விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் எவ்வாறான ஆடைகளை அணிந்து பள்ளிக்குச் செல்லக் கூடாது என்பதையும் இவ்வாக்கம் தெளிவுபடுத்துகிறது. கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Read More »கார்டூனும் கருத்துச் சுதந்திரமும் – முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கேலிச்சித்திரம் பின்னணியும் நோக்கமும்
முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரிசுத்த ஆளுமையை மாசு படுத்தும் வகையில்,தொடர்தேர்ச்சியான மேற்குலகின் அநாகரிகச் செயற்பாடுகள், முஸ்லிம் உலகில் அதற்கு எதிரான குரலை மிகப் பலமாக ஒலிக்கச் செய்துள்ளது. Charlie Hebdo என்ற மதவெறி கொண்ட பிரான்ஸ் பத்தரிக்கை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று கற்பனையாக சித்திரித்து, நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிட்டது. நபிகள் நாயகத்தை wheel chairல் …
Read More »அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள்
இந்த உலகம் சமத்துவ, சகோதரத்துவ உணர்வோடு, அமைதியாக இயங்குவதற்குத் தேவையான சமநிலைத் தன்மைகொண்ட, மகத்தான சட்டங்களை வழங்கியவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள். எனினும், அவர்களைப் பற்றிய தவறான புரிதல் உள்ள சிலர், கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வெறுப்புணர்வை விதைத்து வருகின்றனர். வல்லாதிக்க உணர்வுமிக்க சில அரசியல் தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்துச் சுதந்திரம் என்ற கருத்து நிலையில் இவ்வாறு செய்துவருகின்றனர். உண்மையையும் நியாயத்ததையும் தெளிவாகக் கூறவே கருத்துச் …
Read More »பண்புகளை இழக்கும் பகிடிவதை
பகிடிவதை என்பது, அதிகமான கல்வி நிறுவனங்களுக்குள் வருடாவருடம் புதிதாகப் பிரவேசிக்கும் மாணவர் மீது ஏற்கனவே அங்கு கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்களில் குரூர எண்ணம் கொண்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்படும் ஒருவகைப் பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிடமுடியும். இதைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்களில் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், அங்கு பகிடிவதை என்ற பெயரில் மனதை நிலைகுலையச் செய்யும் குரூரமான பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் அங்கீகரிக்க …
Read More »