Featured Posts
Home » பொதுவானவை (page 109)

பொதுவானவை

மக்கா-மதினா அதிவேக நவீன இரயில் திட்டம்

மக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 20 பில்லியன் சவுதி ரியால் (சுமார் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். இப்புதிய திட்டம் தரும் வசதியின்படி, மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன இரயிலில், 30 நிமிடத்தில் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கும், 2 …

Read More »

தவ்ஹீதில் தடுமாற்றம் ஏன்?

தவ்ஹீதில் தடுமாற்றம் ஏன்? மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி இடம்: GCT கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 04-01-2008 CDs are Available at : துறைமுக அழைப்பகம், ஜித்தா, K.S.A. Tel. 6471200 Ext. 4446

Read More »

துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா?

அண்மையில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர்,”கனாக்களம்- 2007″ என்கிற கருத்தரங்கை நடத்தினர். கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்” என்னும் தலைப்பில் பேச லீனா மணிமேகலையை அழைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அவர் உடை காரணமாக அவமானப்படுத்தப்பட்டதால், “துப்பட்டாவில் தான் இருக்கிறதா தமிழ்க்கலாசாரம்” என்ற தொனியில் தினமணியில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அவர் எழுத்துப்படி, “காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் …

Read More »

திருடர்கள் ஜாக்கிரதை!

ஹிஜ்ரி 1428, ரமளான் பிறை 23-ல், அஸர் தொழுகையை, வேலை செய்யும் இடத்தில் தொழுதுவிட்டு ஜித்தா (சவுதி அரேபியா), பாப்மக்கா செல்வதற்காக மஹ்ஜர் செனாயியாவிலிருந்து மினி பஸ்ஸில் (கோஸ்டர்) சென்றுக் கொண்டிருந்தேன். செனாயியா செக்கிங் பாயிண்டிற்கும் கிங் அப்துல் அஜிஸ் மருத்துவமனைக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டம் குறைந்த இடத்திலிருந்து பங்களாதேஷை சேர்ந்த ஒரு சகோதரர் 10-15 கிலோ எடை கொண்ட பார்சலுடன் பேருந்தில் ஏறினார். அவர் பதற்றமான சூழ்நிலையில் காணப்பட்டார்.

Read More »

சேதுவா? ராமரா?

தற்போது இந்திய அரசியலில் உருவெடுத்திருக்கும் மிகப்பெரும் பிரச்சினை “சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்” நிறைவேற்றப்படுமா? என்பதுதான். மதவெறி பிடித்த அமைப்புகளும், அரசியலில் சுய ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் கும்பல்களும் இணைந்து இல்லாத இராமர் பாலத்திற்காக இந்தியாவில் ஆங்காங்கே வன்முறைகளை ஏற்படுத்தி வருகின்றனர். சேது சமுத்திரத்திட்டத்தில் ஒரு பகுதியில் அகற்றப்படும் சுண்ணாம்புப் பாறைகள் ராமர் கட்டிய பாலம் என்றும் அதை தேசியச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் கருத்துக்களை வைக்கின்றனர். இத்திட்டம் இந்துக்கள் …

Read More »

எல்லோரும் கொண்டாடுவோம்…!

புத்தாண்டைக் கொண்டாட தயாராக இருப்பீர்கள்.ஆண்டு முழுவதும் மாடாய் உழைத்துவிட்டு நல்ல/கெட்டபடியாகக் கழிந்த 2007 ஐ வழியனுப்பும் விதமாக நள்ளிரவு 11:59 ஐ ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறீர்கள். இதோ இன்னும் சில நிமிடங்களில் நம்முடன் இருந்த 365 முழு நாட்களுக்கு விடைகொடுத்து அடுத்த _?_ நாட்களை எதிர் நோக்கி இருக்கிறோம். 2007 ஆம் ஆண்டின் பரவசத்துடன் திக்… திக்..இதயத்துடன் நிசப்தமான நிமிடங்களுக்காக காத்திருப்பவர்களின் சிந்தனைக்கு! இந்த வருடம் பதில் சொல்லா …

Read More »

விடைபெறும் நாளில்….

இணையத்தில் சினிமா மற்றும் பொழுது போக்கு என்று சராசரித் தமிழனாக வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ்மணத்தின் அறிமுகம் கிடைத்தது. சங் பரிவாரத்தைச் சேர்ந்த சிலர் இஸ்லாத்தின் மீதும், நபிகளார் மீதும் அவதூறுகளை எழுதிக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு என் அறிவில் பட்டதை அவர்களின் பதிவுகளிலேயே பின்னூட்டமாக பதிலளித்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டங்கள் வெளியிடப்படாமை, வெளியிடுதலில் தாமதம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே தனியாக வலைப்பூ ஒன்றைத் துவங்கினேன். அவர்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கிய போது இஸ்லாத்தைப் பற்றிய …

Read More »

காற்றைக் கைது செய்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ காட்டுமிராண்டி தாக்குதலில் உயிர் இழந்துள்ளார். இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இறந்த அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அரசியல் படுகொலைகள் இந்தியாவில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பாகிஸ்தானில் நடைமுறைக்கு வந்துவிட்டது. என்றாலும் இம்முறை சோகம் அதிகமாவே இருக்கிறது. கொல்லப்பட்டிருப்பவர் ஒரு பெண் என்பது மட்டுமே இதறக்குக் காரணம் அல்ல. ஏற்கனவே தனது தந்தையை அரசியல் படுகொலையில் பலிகொடுத்தவர்; முஸ்லிம் பெண்கள் அடக்கி …

Read More »

இறைவன் கொடியவனா?

புதியபறவை படம் என்று நினைக்கிறேன். அதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “எங்கே நிம்மதி?” எனத்தொடங்கும் பாடலில் “பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் எவரையும் முணுமுணுக்க வைக்கும். “அர்த்தமுள்ள இந்து மதம் ” என்று புத்தகம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் மிகுந்த இறைநம்பிக்கை உள்ளவர் என்றே நினைக்கிறேன்.(இவரின் சிந்திக்க வைக்கும் பல கவிதைகளை மதுபோதையுடனேயே எழுதுவார் என்று குற்றம் சாட்டப் …

Read More »

டினோஸாரும் இஸ்லாமியத் தீவிரவாதமும்!

கடந்த பத்து வருடங்களில் உலகின் பலபாகங்களிலும் கையாளப்பட்ட சொல்லாடல் ஒன்று உண்டென்றால் அது “தீவிரவாதம்” என்பதே ஆகும். தீவிரவாதம் என்றதும் உங்கள்முன் தாடி,தலைப்பாகையுடன் ஓர் உருவம் உங்கள் நினைவில் வந்து தொலைத்தால், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் (War Against Terrorism) என்ற பெயரில், இஸ்லாத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க பாசிச/யூத/அமெரிக்க/ பார்ப்பனீய ஊடகங்கள் பட்ட கூட்டுக் கஷ்டங்கள் வீணாகி விடவில்லை என்று அர்த்தம். உலகின் பல …

Read More »