Featured Posts

பொதுவானவை

பச்சைப்பொய்களின் நாயகன் புஷ்

பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் குவித்துள்ளது மற்றும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் சதாமுக்கும் பங்கு உண்டு என்ற இரண்டு பச்சைப்பொய்களை சொல்லி ஈராக் நாட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களை துவம்சம் செய்துக்கொண்டிருக்கும் உலக பயங்கரவாதி புஷ்ஷுக்கு எதிராக அமெரிக்காவில் 11 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் பெயர்கள்: 1. Plan of Attack2. Against All Enemies3. Worse than Watergate4. Lies of George Bush5. All the …

Read More »

G8 நாடுகளின் ‘கரீபி ஹட்டாவ்’

ஜூலை முதல் வாரத்தில் ஸ்காட்லாந்தின் கிளனிகல்ஸ் நகரின் நடந்து முடிந்த கூட்டத்தில் G8 எனப்படும் உலகின் ஆகப்பெரிய 8 பணக்கார நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை ஒழிக்கப்போவதாக சூளுரைத்தன.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் இந்த G8. உலகின் பெரும் பணக்கார இந்நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி உலக பொருளியல் தொடர்பான விஷயங்களை விவாதித்து சில பல அறிவிப்புகளை …

Read More »

மதியழகி

2005 ஜனவரி மாதம் ஒரு விடுமுறை நாளில் அது நடந்தது. பொது பேருந்து வசதி இல்லாத அந்த ஊரிலிருந்து நான் வசிக்கும் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் தன் மனைவியை நான் வந்த காரில் (illegal taxi) ஏற்றிவிட்டார். நகரத்தில் நர்ஸாக பணிபுரியக்கூடும். நாங்கள் போய் சேர வேண்டிய நகரம் 4 கி.மீட்டர் என்று வழிகாட்டியது. இவ்வாறு வரும் பயணிகளை பொது நிறுத்தங்களில் இறக்கிவிடுவது வாடிக்கை. டிரைவர், அப்பெண்ணை எங்கு …

Read More »

ஊடகங்களின் போக்கு

இம்ரானா விஷயத்தில் ஊடகங்கள் காட்டி வரும் அக்கறை சொல்லி மாளாது. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதைதான். வெரும் வாயைக் கூட மென்று கொண்டிருப்பவர்களுக்கு தேவ்பந்தின் தீர்ப்பு அவலாகக் கிடைக்கும்போது சொல்லவா வேண்டும். இது மாதிரி நேரங்களிலெல்லாம் ஊடகங்கள் தன்னை சிறுபான்மையினத் தோழனாக காட்டிக்கொள்ள முயலும். பாதிக்கப்பட்ட முஸ்லிமுக்காக களத்தில் குதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குட்டையைக் குழப்ப ஆரம்பித்துவிடும். அதைத்தான் இம்ரானா விஷயத்திலும் செய்து வருகிறது. விட்டில் பூச்சிகளைப்போல் …

Read More »

சவுதி மன்னர் ஃபஹத் காலமானார்

சவுதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் காலாமனார். மன்னர் ஃபஹத் நோயுற்று இருந்ததால் இளவரசர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Read More »

அழகிகளின் பேஜார் ஷோ

சமீப காலமாக, சென்னை நகரில் “ஃபேஷன் ஷோ” என்ற பெயரில் அழகிகளின் ஆபாச நடனம் அரங்கேறி வருகிறது. புத்தம்புதிய நகைகளை டிசைன் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் ஜுவல்லரி முதல், உள்ளாடைத் தயாரிப்பாளர்கள் வரை இத்தகைய ஃபேஷன் ஷோக்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது. சென்ற வாரம் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாட்களாக நடந்த ஃபேஷன் ஷோவை நேரிலும், மீடியாக்கள் மூலமும் பார்த்தவர்கள், அதிர்ச்சியில் வாயடைத்துப் போனதென்னவோ நிஜம். …

Read More »

சிறுபான்மையினருக்கு எதிராக

இந்தியாவில் செயல்படும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் 30,000 அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுகின்றன. இதில் 16,000 அமைப்புக்கள் ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை பெறுகின்றன. இவை மத்திய அரசிற்கு வரவு_செலவைச் சமர்ப்பிக்கின்றன. இன்னும் 14,000 நிறுவனங்களும் இன்னும் ஓர் ஐந்தாயிரம் கோடி அளவிற்கு நிதியுதவி பெறுகின்றன. ஆனால் எந்தக் கணக்கையும் கொடுப்பதில்லை. யானைக்கு அல்வா, பூனைக்கு பூந்தி வாங்கினோம் என்றுகூட எழுதிக் கொடுப்பதில்லை. இத்தகைய நிறுவனங்களை வரைமுறைப்படுத்தப் போவதாக மத்திய …

Read More »

Imrana on video – no rape

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா இம்ரானா? அவரிடமே கேட்டுவிடலாமே.http://www.milligazette.com/dailyupdate/2005/20050724b.htm வீடியோ கோப்பை உங்கள் கணினியில் சேமிக்க, வலது சொடுக்கி Save target as என கொடுக்கவும் [in Internet Explorer]. http://www.milligazette.com/dailyupdate/2005/imrana-no-rape-video.wmv

Read More »

இம்ரானா – ஊடகங்களின் பலாத்காரம்

போனமாதம் நடந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஊடகங்களால் கை, கால் வைத்து ஊதி பெரிதாக்கப்பட்டதால் சினிமா படமாகப்போகும் நிலைக்கு தற்போது வந்து நிற்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜாபர்பூர் நகர் அருகில் உள்ள சர்தவால் கிராமத்தைச் சேர்ந்த நூர் இலாஹியின் மனைவி இம்ரானா (வயது 28) கடந்த ஜுன் மாதம் (2005) அவரது சொந்த மாமனார் அலி முஹம்மது என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதே வழக்கு. தனது கணவர் ஊரில் …

Read More »

குண்டு மனிதருக்கு வந்த கோபம்!

‘விர்’ரென்று வேகமாக வந்து வளாகத்துக்குள் நுழைந்து ‘கிரீச்’சென்று நின்றது அந்த கருப்பு வண்ணக் கார். ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிய அந்தக் குண்டுப்பிறவி படாரென்று கதவை மூடிவிட்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாவி நான்கே எட்டில் முதன்மை வாயிலை அடைந்தது. அரங்குக்குள் நுழைந்து மூச்சிரைக்க, கோபம் கொப்புளிக்கும் கண்களால் இங்குமங்கும் துழாவி, மேற்கே முகம் பார்த்து நின்றிருந்த டிஷர்ட் ஆசாமியை நெருங்கி, ‘மொத்’தென்று விட்டார் ஒரு குத்து. டிஷர்ட் ஆசாமியின் உதட்டோரத்தில் …

Read More »