Featured Posts

நூல்கள்

[தொடர் 4] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

இஸ்லாத்தில் மெஞ்ஞானமா? நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமு தாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர் ஆனை அருளினான். நபியவர்களும் உலக மக்கள் அனை வருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள்.

Read More »

[தொடர் 6] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

அல்குர்ஆனைத் தவறாகப் புரிதல் இந்தப்பிரிகள் அல்குர்ஆனையும், ஹதீஸையும் தவறாகப்புரிந்தோ, அல்லது வியாக்கியானம் செய்தோ, அல்லது தமது வழிகேட்டுக்கு ஏதுவாக அவற்றை வளைத்துக் கூறியோ வழிகெட்ட தோற்றம் பெற்றிருக்கின்றன.

Read More »

[தொடர் 3] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

உள்ளே செல்லுமுன்.. சூஃபித்துவத் தரீக்காக்கள்பற்றி தமிழக, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி அரபுலக முஸ்லிம்களில் கணிசமானோரிடம் கூட இன்று வரைக்கும் சரியான கருத்துக் கண்ணோட்டம் வரவில்லையென்றே சொல்லவேண்டும். காரணம் காலா காலாமாக இவர்களைப்பற்றிய உண்மை அறிமுகம் உலமாக்களாலோ தமிழுலக எழுத்தார்களாலோ அதன் தூய வடிவில் முன்வைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.

Read More »

[தொடர் 5] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

வழிகேடுகளை வரவழைப்பவை: மனோ இச்சை நேர்வழிக்கு பிரதான தடைக்கல்லாக உள்ளதும், உலகில் வழி கெட்ட கொள்கைகள் விரிவடைவதற்கும் மனோ இச்சைகளும் ஒரு காரணமாகும். வழிகேடுகளும், சீரழிவுகளும் நிகழ பெரிதும் பங்காற்றும் இந்த ‘மனோ இச்சை’ பற்றிய தெளிவும், எச்சரிக்கையும் ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டும்.

Read More »

[தொடர் 2] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

முன்னுரை புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள், குடும்பத்தவர்கள், அவர்களின் வழிநடந்தோர் அனைவர் மீதும் உண்டா கட்டுமாக. ஆமீன். தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்கு முன் …

Read More »

[தொடர் 1] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

الطرق الصوفية بالأمس واليوم الإعداد  : محمد جليل عبد الغفور இரங்கலுரை இந்தியாவின் தமிழகத்திலே நெய்வேலி எனும் ஊரைப் பிறப் பிடமாகக் கொண்டவர்தான் சகோதரர் M.யூஸுஃப் பாய் அவர்கள். சிறுபிராயத்திலிருந்தே அழைப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். மிக நீண்டகாலமாகவே தப்லீக் ஜமாஅத் அமைப்பில் இணைந்து செயற்பட்டு பல்வேறு இடங்களுக்கெல்லாம் நீண்ட நேரங்கள் சென்று பல தப்லீக் பெரியார்களைச் சந்தித்து அளவலாவிய அனுபவங்கள் அவர்களுக்கு நிறையவே உண்டு.

Read More »

[தொடர் 4] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

பெயர்கள் வரக்காரணம்: இந்தப் பிரிவுகளுக்கான பெயர்கள் அந்த சிந்தனையை முதல் முதலில் பிரதிபலித்தவர், அல்லது அவரது கருத்தைப்பிரதி பலித்த பிரபல்யமிக்க மாணவர், அல்லது அந்தக்கருத்தின் அடிப்படையில் பெயர்கள் சூடப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக கத்ரிய்யா என்ற பிரிவனர் ‘விதி’ கத்ரை மறுத்ததனால் வந்ததாகும். அந்த சிந்தனையை முதன் முதல் முதலில் கைலான் அத்திமஷ்கி என்பவனே முன்வைத்தவன். அவனது பெயரில் அந்தப் பிரிவின் பெயர் இடம் பெறவில்லை.

Read More »

[தொடர் 3] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

முக்கிய பிரிவுகளின் பெயர்கள் பொய் நபித்துவத்தை வாதிட்ட (முஸைலமாக்கள்) தற்போதைய காதியானிகள், ஹவாரிஜ், முர்ஜிய்யா, கத்ரிய்யா, ஷீஆ (ராபிழா), முஃதஸிலா, ஜஹ்மிய்யா, அஷாயிரா (அஷ்அரிய்யா), மாத்ரூதிய்யா, கர்ராமிய்யா, முஷப்பிஹா, முஅத்திலா, புகைரிய்யா, ளராவிய்யா, ஹர்பிய்யா, அத்திஜானிய்யா,அல்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் உள், மற்றும் வெளி அர்த்தங்கள் உண்டு என வாதிடும் பாதினிய்யா.

Read More »

[தொடர் 2] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

வழிகெட்ட பிரிவுகள் பற்றி இஸ்லாத்தின் பெயரால் பல நூறு பிரிவுகள் தோன்றி இஸ்லாமிய மார்க்கத்தைச் சீரழித்திருக்கின்றன என்பதை அவற்றின் வரலாறுகளைப் பற்றிப்படிக்கின்ற போது அறிய முடிகின்றது. அவற்றில் சில மார்க்கத்தில் புதிய, புதிய திக்ர்கள், தொழுகைகள், அவ்ராதுகள், வாளாயிப்கள் எனப்படும் மார்க்க அம்சங்களை தோற்றுவித்து மக்களை வழிகெடுத்திருக்கின்றன.

Read More »

[தொடர் 1] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

‏ فرق دخلية في الإسلام خريج كلية الحديث الشريف والدراسات الإسلامية بالمدينة المنورة جمع وإعداد : محمد رضوان محمد جنيد நுழைவாயில் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும் நமது தூதரும், வழிகாட்டியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், மற்றும் நல்லடியார் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! வழிகெட்ட பிரிவுகளின் வருகை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் …

Read More »