Featured Posts
Home » 2006 » May » 07

Daily Archives: May 7, 2006

எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள் – 2

தமிழ்மணம் திரட்டியின் தளக்கட்டுப்பாடுகளால் சிறிது காலம் அடங்கி இருந்த மதத் துவேசப் பதிவுகள் அவ்வப்போது தலை தூக்கவே செய்கின்றன. இக்கட்டுப்பாடுகள் மத/தனி மனிதத் தாக்குதல் நோக்கத்தோடு எழுதும் தனிப்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் குறைந்த பட்சம் பின்னூட்டங்களிலாவது முஸ்லிம் வலைப்பதிவர்களை வம்புக்கு இழுக்காவிட்டால் சிலருக்குத் தூக்கமே வராது போலும்! தமிழ் வலைப்பூவில் இஸ்லாமிய எதிர்ப்பைத் தனிப்பதிவாக பதிவது அல்லது பெயருக்குச் சிலவரிகளை எழுதி விட்டு, சம்பந்தப்பட்டச் செய்தியின் சுட்டியைக் கொடுப்பது …

Read More »

பொய் சத்தியம் செய்து விற்றல்..

பெருமைக்காக ஆடையை கரண்டைக்குக் கீழ் அணிதல், கொடுத்த தான தர்மங்களைச் சொல்லிக் காட்டுதல், பொய் சத்தியம் செய்து பொருட்களை விற்றல் போன்றவற்றுக்கு மறுமையில் கடுந்தண்டனை குறித்து.. 68- மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன்,(மக்களின் பயணப்)பாதையில்-தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன். இன்னொருவன், தன்(ஆட்சித்)தலைவரிடம் …

Read More »

அவதூறு கூறி விரோதத்தை ஏற்படுத்துதல்..

அவதூறு கூறி விரோதத்தை ஏற்படுத்துதல் பற்றி.. 67- கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஹூதைஃபா(ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி-6056: ஹம்மாம் பின் ஹாரிஸ்(ரஹ்)

Read More »

ஒப்பாரி, கன்னங்களில் அடித்துக் கொள்வது..

ஒப்பாரி வைப்பது கன்னங்களில் அடித்துக் கொள்வது, சட்டையைக் கிழித்துக் கொள்வது, அறியாமைக் கால கலாச்சாரங்களில் ஈடுபடுவது குறித்து.. 65- (துன்பத்தின் போது) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1298: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) 66- (என் தந்தை)அபூ மூஸா தமது கடுமையான மரண வேதனையால் மயக்கமடைந்து விட்டார். அவரது தலை அவரது மனைவியின் …

Read More »

நம்மைச் சார்ந்தவனல்ல..

நம்மை எதிர்க்க ஆயுதமேந்துபவன் நம்மைச் சார்ந்தவனல்ல. 63- நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7070: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) 64- நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7071: அபூ மூசா(ரலி)

Read More »

இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்

வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்.. 53. நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் …

Read More »