No.0010, தினம் ஒரு துஆ!!!
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
இரவில் கண்விழித்து கேட்கும் துஆ
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ،
الحَمْدُ لِلَّهِ،
وَسُبْحَانَ اللَّهِ،
وَلاَ إِلَهَ إِلَّا اللَّهُ،
وَاللَّهُ أَكْبَرُ،
وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ،
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில்……
லாஇலாஹ இல்லலல்லாஹு வஹ்தஹூ லாஷரீக லஹூ லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்,
அல்ஹம்துலில்லாஹ், வசுப்ஹானல்லாஹ், வலாஇலாஹ இல்லலல்லாஹு, வல்லாஹு அக்பர்,
வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.
பொருள்:-
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் ஏகன்,அவனுக்கு நிகரானவர் யாருமில்லை,ஆட்சியும், புகழும் அவனுக்குரியது, அவன் அனைத்துப் பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்,அவன் தூயவன்,அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன், நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது.
ஆதாரம் :- புகாரி-1154
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library