Featured Posts

Recent Posts

தேவைக்கு அதிகமான நீரைத் தடுக்காதே.

1009. (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2354 அபூஹுரைரா (ரலி).

Read More »

கடனைத் திருப்பிச் செலுத்த வசதியுள்ளவன் பற்றி….

1008. ”செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2288 அபூஹுரைரா (ரலி).

Read More »

அவதாரம் எடுத்தல்!

சில மதங்களில் இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. இக்கருத்து இஸ்லாமிய இறைக்கருத்துக்கு நேர் எதிரானதாகும். அல்லாஹ், ஒருபோதும் ஒரு மனிதராகவோ, அல்லது வேறு ஏதாவது உயிரினமாகவோ அவதாரம் எடுத்து வருவது இல்லை. காரணம், அவன் அழிவே இல்லாதாவன். ஏனைய எல்லாமே அழியக்கூடியன. மனிதனும் மற்றைய உயிரினங்களும் பிறந்து இறந்து விடுவன. மற்ற இயற்கைப் படைப்புகளும் என்றோ அழியக்கூடியன. எனவே, அழியக்கூடியவை மூலமாக அழிவே இல்லாதவன் அவதாரம் எடுத்துத் …

Read More »

கடனாளிக்கு அதிக கால அவகாசமளித்தல்.

1006. ”உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் ‘நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?’ எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!” என்று கூறினார். உடனே, ‘அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!’ என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். …

Read More »

கடனாளி திவாலானால்….

1005. ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்தபோது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2402 அபூஹுரைரா (ரலி).

Read More »

கடனில் சிறிது தள்ளுபடி செய்தல்.

1003. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) புறப்பட்டு வந்து, ‘நன்மை(யான செயலைச்) செய்ய …

Read More »

பள்ளிகளில் பாலியல் கல்வி – ஒரு கண்ணோட்டம்!

பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், “பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் இந்திய குழந்தைகளுக்கு ஏற்றவகையில் இல்லை” என்றன. கேரளா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதோடு பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கமிட்டியையும் அமைத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் செளஹான், மத்தியக் கல்வி அமைச்சகத்திற்கு எழுதியக் கடிதத்தில், …

Read More »

கனிகள் பழுக்கும் முன் விற்காதே.

1002. மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடைவது வரை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ‘பக்குவமடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘சிவக்கும்வரை” என்று விடையளித்துவிட்டு, ‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால்…? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்?’ எனக் கேட்டார்கள். புஹாரி :2198 அனஸ் பின் மாலிக் (ரலி).

Read More »

நிலத்தைப் பண்படுத்தி மரம் நடுவதன் சிறப்பு.

1001. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2320 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

Read More »

பிறருக்கு குத்தகை நிலத்தை தானமாக வழங்குதல்.

998. நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், ‘(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்” என்றேன். இதைக்கேட்ட தாவூஸ் (ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், ‘நபி (ஸல்) அவர்கள் அதைத் …

Read More »