Featured Posts

Recent Posts

நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவில்…….

108- இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவரது தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது, படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இருமனிதர்களின் தோள்கள் மீது தமது இருகைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான் இவர் யார்? என்று …

Read More »

மஸீஹ் தஜ்ஜால்!

107- நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால் என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால் தஜ்ஜால் என்னும் மஸீஹ், வலது கண் குருடனாவான். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள். புகாரி- 3439 : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Read More »

பால் Vs மது

106- என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூஸா (அலை) அவர்களைப் பார்த்தேன். அவர்கள் ஷனூஆ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணைத் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈஸா அவர்களைப் பார்த்தேன். அவர் நடுத்தர வயதுடைய சிகப்பான மனதராகவும் (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்றும் இருந்தர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான் …

Read More »

தஜ்ஜாலின் தோற்றம் குறித்து….

105- நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும் போது அவனுடைய இருகண்களுக்கு மத்தியில் காஃபிர் என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றதும் இப்னு அப்பாஸ் (ரலி) நான் இதை நபி (ஸல்) கூறக் கேட்கவில்லை. எனினும் மூஸா (அலை) தல்பியா கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் காண்பது போன்று உள்ளது என நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன் …

Read More »

நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்

104- நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான சுருள் முடிகொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா அவர்களை நடுத்தர உயரமும், சிகப்பும், வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் (சுருள்,சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாப்பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். …

Read More »

தொழுகை கடமையாகுதல்!

103- நான் இறை இல்லம் கஃபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விளிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தட்டு என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காரை எழும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம் ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பபட்டது. கோவேறுக் கழுதையை விட சிறியதும் கழுதையை விட பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) …

Read More »

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் பற்றி…

102- நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை …

Read More »

யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்!

101- நான் அபூ ஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப் பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்) எனும் (74:1 ஆவது) வசனம் என்றார்கள். நான் (நபியே!) படைத்த உங்கள் இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1 ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகின்றார்கள் என்றேன். அதற்கு அபூ ஸலமா …

Read More »