Featured Posts

இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்

அல்லாஹ் தன் சிருஷ்டிகளில் விரும்பியவற்றைக் கொண்டு மனிதர்களிடம் சத்தியம் செய்கிறான். மனிதர்களைப் பொறுத்தவரை சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம் அனுமதிக்கப்படாதது போல அவற்றைக் கொண்டு இறைவனிடத்திலும் சத்தியம் செய்வதில் ஷிர்க் நுழைந்து விடுகிறது. அல்லாஹ் தன் சிருஷ்டிகளைப் பாராட்டி அவற்றின் கௌரவத்தையும், அமைப்பையும், அவற்றைப் படைத்தல் இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அதன் காரணத்தினால் தன் ஏகத்துவத்தை உறுதிப் படுத்துகிறான். இவையனைத்தையும் ஏகத்துவத்தின் அத்தாட்சிகள் என்று தெரிவிப்பதற்காகவும் அவற்றைக் …

Read More »

கார்ட்டூன் விவகாரம்: இழிவுபடுத்தும் உரிமை?

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமாகச் சித்தரித்து டென்மார்க் பத்திரிக்கை (Jyllands-Posten) கார்ட்டூன் வெளியிட்டதையும் அதனை நார்வே கிறிஸ்தவப் பத்திரிக்கை மறுபதிப்புச் செய்து மேலும் அவமதித்ததையும் எதிர்த்து உலக முஸ்லிம்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதன் பிரதிபலிப்பாக பெரும்பாலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் டென்மார்க் மற்றும் நார்வேயின் பொருட்களை புறக்கணிப்பு செய்வது என்று முடிவு செய்துள்ளன. இஸ்லாம் உருவ வழிபாட்டையும் அதற்குக் காரணமாக இருக்கும் அநாவசிய சித்திரங்கள் தீட்டுவதையும் தடுக்கிறது. இறைவனைத்தவிர …

Read More »

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை

உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதத்தை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை யாரும் கொடுக்காமலேயே அமெரிக்கா அடாவடியாக எடுத்துக் கொண்டுள்ளது. சர்வ வல்லமை கொண்ட ஒருநாடு தீவிரவாதத்திற்கு எதிராக தலை தாங்கினால் என்ன தவறு? என அப்பாவியாகக் கேட்பவர்கள் கவனிக்க: அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 216 தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக இருபதுக்கும் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (9)

பிளவுபட்ட தலைமை முடியாட்சி தாபிக்கப்பட்டதினால் விளைந்த முதல் கேடு தலைமை இருகூறாகப் பிளவுபட்டமையாகும். அண்ணலாரதும் தொடக்க காலக் கலீபாக்களதும் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரே தலைமையின் கீழ் இருந்தது. மத்திய அதிகாரபீடமே யாவற்றுக்கும் மேலானதாகத் திகழ்ந்தது. ஒழுக்கம், அறிவு, சமூகம், அரசியல் முதலிய அத்தனை வாழ்க்கைத் துறைகளும் அம்மத்திய அதிகார பீடத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இருந்தன. மக்களால் தெரிவு செய்யப்பட்டவரான கலீபாவே மதத் தலைவராகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார். அவர் …

Read More »

சத்தியம் செய்தல்

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல் அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் தான் நாடியதைக் கொண்டு சத்தியம் செய்கிறான். ஆனால் மனிதர்களைப் பொருத்தவரையில் அல்லாஹ்வை விடுத்து மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது கூடாது. என்றாலும் பெரும்பாலான மக்களுடைய பேச்சுகளில் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. எந்த மகத்துவம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்கும் பொருந்தாதோ அத்தகைய மகத்துவம் சத்தியத்தில் உள்ளது. இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது: …

Read More »

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் (Debate)

புனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் நன்றி: மக்கள் உரிமை வார இதழ் பெங்களூல் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் “Art of Living” என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது. புனித வேதங்களின் வெளிச்சத்தில் …

Read More »

ஹமாஸ் வெற்றியும் ஊடகங்களின் ஒப்பாரியும்

அடைமழையினால் தனது வீட்டை இழந்து தெருவில் நிர்க்கதியாக நிற்பவரை நீங்கள் மனிதாபிமானத்தோடு தனது குடைக்குள் அழைத்துக் கொண்டு மழையிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறீர்கள். சிறிது நேரம் கழித்து அவர் உங்கள் குடையைப் பிடுங்கிக் கொண்டு உங்களை மழையில் நனைய விட்டால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்? அவசரமாக கடிதத்தை அனுப்ப வந்தவர், பெறுநரின் முகவரியை எழுத மறந்து விட்டார். உடனே அருகிலிருக்கும் உங்கள் பேனாவை இரவல் வாங்கி அதனை எழுதி போஸ்ட் …

Read More »

குஜராத் ‘நினைவுத் துயரங்கள்’ 4-ம் ஆண்டு

நினைவுத் துயரம் – குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை எதிரே வருகிறது பிப்ரவரி. நான்கு ஆண்டுகளாகியும் கிஞ்சிற்றும் மறக்க முடியாத கொடூரத் துயரங்கள், கண்களை விட்டு அகல மறுக்கும் வன் செயல்கள், ரத்த வாடைகள், சரியாகச் சொல்வதென்றால் பிப்ரவரி 28, 2002 அன்று தான் குஜராத்தில் முஸ்லிம்கள் கூட்டங் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் தொடங்கியது. அதற்கு முந்தைய நாள்தான் பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் ரயில் எரிந்த சம்பவம் …

Read More »

கோர்ட்டுக்கு வந்த ஒட்டகம்!

ஒட்டகம் குர்பானிக் கொடுக்கபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல? வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடுத்தவர் சொன்ன காரணங்கள் நகைப்பிற்குறியவையாக இருந்ததோடு உள்நோக்கமும் உடையதாகும். வழக்கின் முக்கிய அம்சமாக ஒட்டகங்கள் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பலியிடுவதற்காக வெகுதொலைவு நடத்திக் கொண்டு வரப்படுகின்றன. இக்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேரளாவில் ஒட்டகம் பலியிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதைப் போல் தமிழ்நாட்டிலும் தடை செய்ய வேண்டும் என்று …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (8)

இரண்டாவது கட்டம்: முடியாட்சியும் விளைவுகளும்இஸ்லாமிய வரலாற்றில் முதற்கட்டத்தில் இஸ்லாம் விரிந்து பரந்தது. நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளில் இஸ்லாம் உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்தது. அத்துடன் பெருந்தொகையான மக்களும் இஸ்லாத்தின் கொடியின் கீழ் ஒன்று திரண்டனர். இஸ்லாத்தின் முதற்கட்டத்தின் பிரதிநிதிகளாக அமைந்தவர்கள், இஸ்லாத்தின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து அதனைத் தம் சொல்லிலும் செயலிலும் எடுத்துக் காட்டியவர்களாவர். இம்மனிதப் புனிதர்களின் உயர் பண்பாலும், பண்பட்ட நடத்தையாலும் கவரப்பட்டு …

Read More »