Featured Posts

நூல்கள்

பாடம்-05 | ஷிர்க் (அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்)

ஷிர்க் (அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்) ஷிர்க் எனும் செயல் இரண்டு வகைப்படும். 1. பெரிய ஷிர்க் 2. சிறிய ஷிர்க் 1. பெரிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்) இதன் காரணத்தால் நற்செயல்களில் தோல்வியும் என்றென்றும் நரக நெருப்பில் இருக்க வேண்டிய பயங்கர நிலையுமேற்படும் எனக் குர்ஆன் கூறுகிறது. ‘இன்னும் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டும் அழிந்து விடும்.’ …

Read More »

பாடம்-04 | தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை

தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை. தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை மூன்று அம்சங்களைக் கொண்டது. 1. தவ்ஹீத் அர் ருபூபிய்யா – அல்லாஹ்வின் ஆதிபத்தியத்தில் ஏகத்துவம். அகிலங்களுக்கெல்லாம் அதிபதி ஒருவனே என்றும் அவனே அதனைப் படைத்தவன், நிர்வாகிப்பவன், பரிபாலிப்பவன், உணவளிப்பவன், பாதுகாவலன் என்றும் அவன்தான் அல்லாஹ் என்ற உறுதியான நம்பிக்கை.

Read More »

பாடம்-02 & பாடம்-03 | இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து / ஈமானின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து 1. வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும் வந்தார்கள் என்றும் உள்ளத்தில் விசுவாசம் கொண்டு நாவால் மொழிதல். 2. ஐங்காலத் தொழுகையை தவறாது நிறைவேற்றல். 3. ஜகாத் என்னும் ஏழை வரியை வருடம் தோரும் செலுத்துதல். 4. ரமலான் மாதம் நோன்பு நோற்றல். 5. வாழ்க்கையில் ஒரு முறையேனும் (வசதி இருப்பின்) ஹஜ் …

Read More »

பாடம்-01 | இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம்

இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம். லா இலாஹ இல்லல்லாஹ் என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. அவையாவன மறுப்பதும் உறுதிபடுத்துவதுமாகும். முதலாவது: எல்லாப் புகழுக்கும் உரிய அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்க்கும் தெய்வீகத் தன்மை கிடையாது என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறும் ஷஹாதா மறுக்கிறது. அல்லாஹ்வை அன்றி ஏனையவைகள் மலக்குகள், நபிமார்கள், ஏனைய மனித இனங்கள், சிலைகள், உலகின் …

Read More »

24] சிலுவைப்போர் தொடக்கம்

முகம்மது நபியின் வழித்தோன்றல்களான முதல் தலைமுறை கலீஃபாக்கள் எத்தனைக்கு எத்தனை மத மோதல்கள் உண்டாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்களோ, அதே அளவு தீவிரத்துடன் மோதலில் காதல் கொண்ட சுல்தான்களும் பின்னாளில் தோன்ற ஆரம்பித்தார்கள். கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அரேபியப் பாலைவனங்களில் சூடு அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது. ஒரு புறம் திம்மிகள் என்று வருணிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் ஆட்சியாளர்களின் திறமையின்மை காரணமாக …

Read More »

23] பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம்

பொதுவாக, இந்தப் பொற்காலம் என்கிற பதத்துக்குச் சரியான வரையறை ஏதும் கிடையாது. மழை பொழிந்தால் பொற்காலம். நிலம் விளைந்தால் பொற்காலம். வரிச்சுமை குறைவாக இருந்தால் பொற்காலம். மன்னன் கொடுங்கோலனாக இல்லாமல் இருந்தால் பொற்காலம். கலை வளர்ந்தால் பொற்காலம் என்று மிகவும் மேலோட்டமான காரணங்களையே பொற்காலத்துக்கு நமது சரித்திர நூல்கள் இதுவரை தந்துவந்திருக்கின்றன. உண்மையில், மாபெரும் இனப்போர்கள் மூள்வது வலுக்கட்டாயமாகத் தவிர்க்கப்படுமானால், அந்தக் காலகட்டத்தைத்தான் பொற்காலம் என்று சரியான சரித்திர வல்லுநர்கள் …

Read More »

22] கலீஃபா உமர்

ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638-ல். அது கலீஃபா உமரின் காலம். (இரண்டு உமர்கள் இருக்கிறார்கள். இந்த முதலாவது உமர், முகம்மது நபியுடன் நேரடியாகப் பழகியவர். அவரது தலைமைத் தளபதி போல் இருந்தவர். இரண்டாவது உமர், கி.பி. 717-ல் ஆட்சிக்கு வந்தவர். இவரும் கலீஃபாதான். ஆனால் முகம்மது நபியின் நேரடித் தோழர்கள் வரிசையில் வந்தவர் அல்லர். மாறாக, “உமையாக்கள்” என்னும் ஆட்சியாளர்களின் வழிவந்தவர்.) அதுவரை யூதர்களாலும் …

Read More »

21] இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்

முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கை வெளியானபோது, அதனை மனப்பூர்வமாக ஏற்பதாகச் சொல்லித்தான் யூதர்களும் தம்மை மதினாவின் இஸ்லாமிய அரசுக்கு உட்பட்ட குடிமக்களாக அறிவித்துக்கொண்டார்கள். ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தில் குறிப்பாக முகம்மது வாழ்ந்த காலத்தில் இஸ்லாத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஏராளமான கலகங்களுக்கும், ஒரு சில யுத்தங்களுக்கும் மறைமுகத் தூண்டுதல்கள் அவர்களிடமிருந்தே வந்ததாகச் சரித்திரம் சொல்கிறது. யுத்தம் என்று வரும்போது, ஒப்பந்தப்படி யூதர்கள் முஸ்லிம்களை ஆதரித்தாகவேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் யூதர்கள் …

Read More »

20] இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

“பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது” என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது. கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.முகம்மது நபி பிறந்த சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ …

Read More »

19] யூதர்களுடன் ஓப்பந்தம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 19 மதினா என்கிற யத்ரிப் நகரில் அரேபியர்களும், அவர்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிக அளவு யூதர்களும் வசித்துவந்தார்கள். இதில், அரேபியர்கள் என்பவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள். அதிகம் படித்தவர்களோ, பணக்காரர்களோ அல்லர். மெக்கா நகரின் குறைஷிகளைப் போலல்லாமல், முகம்மதுவை ஓர் இறைத்தூதராக ஏற்பதில் அவர்களுக்குப் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் இல்லை. காரணம், முகம்மதுவை அவர்கள் தங்களில் ஒருவராகப் பார்க்க முடிந்ததுதான். அவர்களைப் போலவே …

Read More »