பிரித்துக் காட்டப்பட்ட முனாபிக்குகள்:
مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِه مَنْ يَّشَآءُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ
‘நல்லவரிலிருந்து தீயவரை பிரித்தறியும் வரை நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை விட்டு விடுபவனாக இல்லை. மேலும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தருபவனாக இல்லை. எனினும், அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடுவோரைத் தெரிவு செய்கின்றான். எனவே, அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டு, (அல்லாஹ்வை) அஞ்சி வாழ்ந்தால் உங்களுக்கு மகத்தான கூலியுண்டு.’ (3:179)
உஹதுப் போரில் ஏற்பட்ட துன்பகரமான நிகழ்வுகள் உண்மையான முஃமின்கள் யார்? ஈமான் கொண்டோம் என்று வாயால் கூறிக் கொண்டு நயவஞ்சகத்தனமாகத் துரோகம் செய்து வந்த முனாபிக்குகள் யார்? என்பதை பிரித்துக் காட்டின. உண்மையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பங்கள் உண்மையான முஃமின்களையும் ஈமானில் பலவீனமானவர்களான போலிகளையும் அடையாளம் காட்டும் அல்லாஹ்வின் சுன்னாவாகும்.