Featured Posts

Recent Posts

உண்ணும் பருகும் முறையில் பேணுதல்.

1313. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!” என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. புஹாரி : உமர் பின் அபீஸலமா …

Read More »

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-4)

பைபிள் கூறும் ”தாண்” என்ற ஊரும் முரண்பாடும் 5. வரலாறுகள் என்று பைபிள் கூறும் செய்திகள் மிகுந்த பலஹீனம் உடையதாகவும் உறுதியற்றதாகவும் உள்ளன. ஆனால் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளில் எதுவுமே உறுதியற்றவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. பைபிள் கூறும் சில சம்பவங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் காண்போம்.

Read More »

மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.

1310. இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான். புஹாரி :3307 ஜாபிர் (ரலி). 1311. …

Read More »

பானமுள்ள பாத்திரத்தை மூடுதல்.

1309. அபூ ஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ(ரலி) ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டுவந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். புஹாரி : 5605 ஜாபிர் (ரலி).

Read More »

இஸ்லாம் – கிறிஸ்துவம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் வெவ்வேறானதா?

திண்ணமாக இல்லை! யூத மதத்தைப் போன்றே, இப்ராஹீம் (அலை) அவர்களை இவ்விரு மதங்களும் சிறப்புக்குரிய தமது மூதாதையராகவும், இறைத்தூதராகவும் போற்றுகின்றன. அதுமட்டுமல்ல! அவருடைய இரண்டு புதல்வர்களின் மூலமாக நேரடி வாரிசுகளாக வந்த மூன்று இறைத்தூதர்களையும் இம்மூன்று மதங்களும் நம்புகின்றன. அதாவது, இப்ராஹீம் (அலை) அவர்களின் மூத்த புதல்வர்களான இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியில் வந்தவர்தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்!

Read More »

பால் குடித்தல் பற்றி….

1307. நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரின் குதிரை அவருடனேயே பூமியில் அழுந்திவிட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), ‘எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் …

Read More »

போதை தராதவற்றை பருக அனுமதி.

1304. அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்(குப் பருகக் கொடுப்பதற்)காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா? இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குகென்றே (தண்ணீரில்) பேரீச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் …

Read More »

போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க.

1303. எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5575 இப்னு உமர் (ரலி).

Read More »

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.

1301. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 242 ஆயிஷா (ரலி). 1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு …

Read More »

குற்றங்களின் எண்ணிக்கை

ஏப்ரல்-28, 2008 அரப் நியூஸ் நாளிதழ் தெரிவிக்கும் செய்திக் குறிப்பு, கடந்த மூன்று மாதங்களில் மக்கா ரோந்துக் காவல் துறையினரால் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 10 முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை மக்காவைச் சார்ந்த ரோந்துக் காவல்துறையினர் 8,068 பேரை பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். இதில் 6,508 எட்டுபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபடடுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Read More »