Featured Posts

நேசகுமாரும், ஹமீத் ஜாஃபரும்.

ஒருவரின் கருத்தை மறுக்கவில்லை என்பதால், அக்கருத்தில் முழு உடன்பாடு உண்டு என்பது அர்த்தமல்ல. சகோதரர் ஹமீத் ஜாஃபர், சகோதரர் நேசகுமாருக்கு எழுதியது, அதற்கான எதிர் கருத்தை நேசகுமார், ஹமீத் ஜாஃபருக்கு எழுதியது. இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்பதாலும், மேலும் இஸ்லாத்தைப் பற்றி ஹமீத் ஜாஃபர் தமது சார்பாக முன் வைத்தக் கருத்தை சகோதரர் நேசகுமார் விமர்சித்தபோது, அதற்கான தக்க பதிலை அளிப்பது மீண்டும் ஹமீத் ஜாஃபருக்கே கடமையாகிறது. எனவே …

Read More »

கற்காலம் சொல்லும் கருத்து!?

சகோதரர் நாகூர் ரூமியின் ”கற்காலம்” என்ற கட்டுரையின் சுட்டியை அனுப்பி, இது பற்றிய “இஸ்லாத்தின் கருத்தென்ன? என்பதை முடிந்தால் விளக்குங்கள்” என்று நண்பரொருவர் கேட்டிருந்தார். கட்டுரையைப் படித்ததில், இஸ்லாத்திற்கு முரணானக் கருத்தாக என் சிந்தனைக்குத் தோன்றுவதை இங்கே பதிவு செய்கிறேன் தவறிருந்தால் திருத்துங்கள். கல்லெறிந்து கொல்லும் தண்டனை இஸ்லாத்தில் இல்லை என்பதைப் போல் காட்ட கற்காலம் கட்டுரையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. எதற்காக இந்தக் கட்டமைப்பு? யாரைத் திருப்திப்படுத்த …

Read More »

பாமினி to யுனிகோடு (சீர்மை)

Bamini/Sarukesi to Unicode (improved version) பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிர்தவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் இன்னும் இதனை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை யுனிகோடில் மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்துள்ளேன். முக்கியமாக கமா(,) பிரச்சினை இனி இருக்காது. இந்த எழுத்துரு மாற்றிக்கு முன்னோடி நண்பர் சுரதா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இனி மேலும் பல பாமினி/சாருகேசி எழுத்துரு இணையதளங்கள் யுனிகோடு இணையதளமாக மாற்றம் …

Read More »

எ-கலப்பை 2.0 பாமினி

தமிழ் சகோதரர்கள் யுனிகோடுக்கு மாற வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமத்துடன் 3 வகை தட்டச்சு முறைகள் எ-கலப்பை 2.0 வெளியீட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்காக “தமிழா” நண்பர்களுக்காக தமிழ் சமுதாயம் நன்றிகடன் பட்டிருக்கிறது. இதில் ஒரு சில விஷயங்களை அடுத்த பதிவில் சேர்த்தால் இன்னும் பொழிவுடன் காணப்படும். நான் எ-கலப்பை 2.0 பாமினி வெளியீட்டை யுனிகோடு தட்டச்சு முறைக்காக பயன்படுத்துவதால் அதில் கண்ட விஷயங்கள்: i)பாமினி தட்டச்சு உபயோகிப்பவர்கள், யுனிகோடில் நேரடியாக …

Read More »

ஒரு புத்தகம் பற்றி.

கிழக்கு பதிப்பகம் வெளியீடு, நாகூர் ரூமியின் ”இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்” புத்தகத்தின் சில கருத்துக்கள் இஸ்லாத்திற்கு உடன்பாடில்லை என்றாலும், இஸ்லாத்தைப் பற்றிய அனைத்துத் தவறான பிரச்சாரத்திற்கும் நேர்த்தியான விளக்கங்களை வழங்கியிருக்கிறார். பெண்ணினக் கொடுமைக்குத் துணை போகிறது என மாற்றாரால் விமர்சிக்கப்படும் போலிப் பிரச்சாரத்திற்கு அழுத்தனமான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ”இஸ்லாமும் பெண்களும்” என்ற தலைப்பின் கீழ்:இஸ்லாத்துக்கு முன் பெண்களின் நிலை.இஸ்லாமும் பலதார மணமும்.நபி (ஸல்) அவர்களின் பலதார மணங்கள்.விவாகரத்து, ஜீவனாம்சம், …

Read More »

தேர்தல் ஆணையரின் தரமான ஆலோசனை.

ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். தேர்தல் நடைபெறும் போது பல்வேறு காரணங்களால் (பெரும்பாலும் வெறுத்துப்போய்) சுமார் 35-40 பேர் வரை வாக்களிப்பதில்லை. மீதமுள்ள 65-70 பேரும் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். அவற்றுள் அதிகபட்ச வாக்குகளை (25-30 தான் இருக்கும்) வாங்கி விடுகிற வேட்பாளர் (கட்சி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது 100 பேர் உள்ள தொகுதியில் பெரும்பான்மையோருடைய (75-70 சதம்) வாக்குகளை பெறாதவர் வெற்றி பெற்றவராக …

Read More »

பாடம்-10 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும்

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும். “இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள்; அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.” என அல்லாஹ் கூறுகின்றான். (76:7)

Read More »

யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்டஈடு!

யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்! (08-03-05 அன்று பதிந்த இக்கட்டுரை அன்றே காணாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகிறேன்.) இரண்டு ஆங்கில பத்திரிக்கைகள் இவ்வளவு என்று குறிப்பிடாமல் தாங்கள் யூசுஃப் இஸ்லாம் எனும் பிரபல பாடகருக்கு இழப்பீடு கொடுத்ததாக தெரிவித்தன. முன்பு கேட் ஸ்டீவன்ஸ் என்ற பெயரில் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகராக இருந்தவர் யூசுஃப் இஸ்லாம். அவர் இஸ்லாத்தை தழுவியபின் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபட்டு உலகெங்கும் …

Read More »

பாடம்-09 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல்

அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல். கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்: ‘நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என (நபியே!) நீர் கூறுவீராக. அவனுக்கு யாதோர் இணையுமில்லை; (துணையுமில்லை) இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன்; இன்னும் (அவனுக்கு கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் (இந்த உம்மத்தில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக.)’ அல்குர்ஆன்:6.162-163. ‘ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் …

Read More »

த்சு..த்சு.. பாவம் மோனிகா!

“காதல் பரிசாக கிளின்டன் கொடுத்த 20 மில்லியன் டாலரை ஹிலாரி கிளின்டன் அபகரிக்க பார்க்கிறார். எனவே சிறிது நாட்களுக்கு உங்களிடம் அதனை அனுப்பி பாதுகாக்கலாம் என்றிருக்கிறேன். பாதுகாத்து தந்ததற்காக பாதி தொகை உங்களுக்கு தரப்படும்” என்று யாராவது மோனிகா லெவின்ஸ்கியின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பினால் யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். காரணம், மின்னஞ்லை திறந்தால் இதுபோன்ற செய்திகளும், வைரஸ் அட்டாச்மென்ட்டுகளும், வயாகரா அழைப்புகளும்தானே வருகிறது.இதுபோல் மின்னஞ்சல்களை அடிக்கடி பெற்றுக்கொள்கிறவர்களுக்கு ஆயிரத்துடன் ஒன்று …

Read More »