அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “(அல்லாஹ்வை) திக்ர் செய்தல், திக்ர் செய்பவருக்கு நல்ல பலத்தைக் கொடுக்கிறது. எந்தளவுக்கென்றால், திக்ர் இல்லாமல் செய்ய முடியாதிருக்கும் ஓர் விடயத்தை திக்ருடன் ஒருவர் உண்மையாகவே செய்து விடுகின்றார். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நடை அமைப்பிலும், அவரின் பேச்சிலும், அவரின் வீரத்திலும், எழுத்திலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பலம் இருந்ததை நான் நேரடியாகவே பார்த்தேன். புத்தகம் ஒன்றைத் தொகுத்து எழுதக்கூடிய …
Read More »Daily Archives: June 23, 2018
அல்லாஹ் இட்ட வரம்புகள், சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் அல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 046]
“(கொஞ்சம் இப்படிக்) கற்பனை செய்துபார்! நீ நடந்து செல்லும் உன் பாதையில், ‘முன்னே செல்லத் தடை; மிதிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதி இருக்கிறது!’ என்று எழுதப்பட்ட அறிவித்தல் பதாகை காணப்படுகிறது. அப்போது, ‘தடை!’ என்ற வார்த்தையைச் சொல்லி (எழுதி) அப்பதாகையை வைத்தவன் மீது உன் மனதில் குரோதம் ஏற்படுவதை நீ கண்டு கொள்ளவேமாட்டாய்!. மாறாக, அதற்காக நீ அவனுக்கு நன்றி செலுத்துவாய். அப்பதாகை, உன் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதென்றும் நீ சிந்திக்கவேமாட்டாய்! …
Read More »வேண்டாம் இந்நிலைப்பாடு! [உங்கள் சிந்தனைக்கு… – 045]
இமாம் வஹ்ப் இப்னுல் வர்த் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “உள்ளே ஷைத்தானின் நண்பனாக நீ இருந்துகொண்டு, வெளியே அவனைத் திட்டாதே. அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்!”. { நூல்: ‘ஸிfபதுஸ் ஸfப்வா’, 03/135 } قال الإمام وهب بن الورد رحمه الله تعالى:- [ ولا تسبّ الشيطان في العلانية، وأنت صديقه في السّرّ. إتّق الله! ] { صفة الصفوة، ٣/ ١٣٥ …
Read More »உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன்- 3 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-22]
துல்கர்னைன் ஈமானிய உறுதியுடனும் மக்களின் எழுச்சியுடனும் அநியாயக்கார அரசனை எதிர்கொண்டார். இதன் மூலம் தனது நாட்டை அநியாயம் நிறைந்த ஆட்சியின் பிடியில் இருந்து விடுவித்தார். ஆனால் அண்டை நாடுகளில் அநியாயமும் அக்கிரமமும் தலைவிரித்துத் தாண்டவமாடும் போது நீதியையும் நியாயத்தையும் நேசிக்கும் இவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே துல்கர்னைன் அல்லாஹ்வின் உதவியுடன் தனது நாட்டை விடுவித்ததுடன் எதிரி அரசனையும் தோற்கடித்து அந்த எல்லைகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். துல்கர்னைன் வெறுமனே …
Read More »பெருநாளும் நானும்
நோன்புப் பெருநாள் எனக்கு சிறிய சோதனையுடனேயே கடந்துபோனது. பெருநாளைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கால் பெருவிரலில் ஏற்பட்டிருந்த சிறிய சிரங்கொன்று வேலைப்பழுக்களால் வீக்கமுற்று வீட்டு வைத்தியத்திற்கும் அடங்காத வகுதிக்குள் முன்னேறியிருந்தது. அது ஒருபுறம் இருக்க, பெருநாள் தொழுகைக்கிடையில் பித்ராவைக் கொடுத்து நோன்பை வழியனுப்பும் முக்கிய கடமை அனைவருக்கும் காத்திருந்தது. வீட்டிலுள்ளவர்கள் சார்பாக, தேவையான அரிசியினை மனக்கணக்கிட்டு தானே அளந்து ஏழைகளுக்கு கொடுத்துவிடுவது எனது தாயின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், …
Read More »காரியாலயமும் நானும்
அன்று காரியாலயத்தில் பொதுமக்கள் தினம் என்பதனால் பொறுப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. காலை 9.00 மணியுடன் ஆரம்பித்த வேலைகள் பகற்பொழுதைக் கடந்த பின்னர்தான் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்த நேரம் பார்த்து லுஹருடைய தொழுகையை முடித்துக் கொள்ள எண்ணி வுழு செய்துவிட்டு, தொழுகையறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போது, என்னை நோக்கி அவசரமாக அங்கு வந்த ஒரு பொதுமகன் வயதான தாயுடன் வந்ததாகவும், தனது வேலையை அவசரமாக முடித்து தரும்படியும் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library