Featured Posts

Recent Posts

இதுதான் இஸ்லாம் (பகுதி-4)

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது . அதனை உத்தம திரு நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது: இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது. 1- வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதுடன் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் தூராகவும் இருக்கிறார் என்று சாட்சியம் கூறுவது.

Read More »

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-6)

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா? திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே! என்ற கிறித்தவ சபைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

Read More »

அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கும் போது….

1403. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். புஹாரி :5232 உக்பா பின் ஆமிர் (ரலி).

Read More »

தங்களின் தேவையை நிறைவேற்ற பெண்கள் வெளியே செல்தல்.

1402. பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப் (ரலி) பார்த்துவிட்டு ‘சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற …

Read More »

சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.

1401. (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 6247 அனஸ் (ரலி).

Read More »

வேதக்காரர்களின் ஸலாமுக்கு எப்படி பதிலுரைப்பது?

1398. வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6258 அனஸ் இப்னு மாலிக் (ரலி). 1399. யூதர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் அவர்களில் சிலர் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல் என …

Read More »

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 9.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க. ‘மதம் மாறாதே’ ‘மதம் மாறாதே’! ‘அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே’ அப்படீன்னு இன்னும் …

Read More »

ஒரு முஸ்லீமுக்கு பிற முஸ்லீமின் மீதுள்ள கடமை.

1397. ”ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1240 அபூஹுரைரா (ரலி).

Read More »

வாகனத்தில் செல்பவர் நடப்பவருக்கு ஸலாம் கூறுதல்.

முகமன் கூறுதல். (ஸலாம்) 1396. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) ஸலாம் சொல்லட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6234 அபூஹுரைரா (ரலி).

Read More »

பிறர் வீட்டில் துவாரம் வழியாகப் பார்க்காதே.

1393. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று …

Read More »