Featured Posts

Recent Posts

பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

1349. நபி (ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். புஹாரி : 5784 இப்னு உமர் (ரலி). 1350. கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5788 அபூ ஹுரைரா(ரலி).

Read More »

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆனது எப்படி?

அப்பொழுது அவருக்கு வயது 40! வழக்கம்போல் ஹிரா குகையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த வேளை அது! வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் வஹீ எனப்படும் இறைச்செய்தி முதன் முதலாக இறங்கிற்று. அவருடைய வாழ்வில் 23 வருடங்கள்வரை இறங்கிய இந்த இறைச்செய்தியே திருக்குர்ஆன் எனப்படுகின்றது. வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக தான் பெற்ற இறைச்செய்தியான திருக்குர்ஆனை தன் சமூகத்தாரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். ஒரு சிறிய கூட்டம் அவருடைய …

Read More »

அது ஒரு காகம்! (நீதிக்கதை)

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

Read More »

மென்பட்டு விரிப்புகள் உபயோகிக்கலாம்.

1348. ”(எனக்குத் திருமணம் ஆன பொழுது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். (பின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம் ‘எங்களைவிட்டு உன் விரிப்புகளை அப்புறப்படுத்து” என்று கூறுவேன். அவள், ‘நபி (ஸல்) அவர்கள், …

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-3)

இஸ்லாம் கூறும் நல்லறங்களும் தீயவைகளும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற அவன் தன் படைப்பினங்களுக்கு குர்ஆன் நபிமொழி மூலம் வழங்கிய அறிவுரைகளில் முழுமையாக ஒரு மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அத்துணை அம்சங்களையும் அழகுபட விவரிக்கின்றான். நல்லறங்களை ஒருவன் தன்னால் இயன்ற அளவு செய்வதையும் தீய செயல்களை முற்றிலும் தவிர்ந்து கொள்வதுதான் அவனது திருப்பொருத்தத்தை பெறும் அடிப்படையாக உள்ளது.

Read More »

ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.

1347. ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்றார்கள். புஹாரி : 5818 அபூபுர்தா (ரலி).

Read More »

பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.

1346. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள். புஹாரி : 5812 அனஸ் (ரலி).

Read More »

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள்

ஐ.ஏ.எஸ். (இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ். (இந்திய பாதுகாப்புப் பணி), ஐ.எஃப்.எஸ் (இந்தியாவின் வெளிவிவகார பணி) உள்ளிட்ட அகில இந்திய அளவிலான அதிகாரிகளாக பணிபுரியக் கூடிய வேலைக்கு மத்திய அரசு தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி) ஆண்டு தோறும் முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வருடம் 27 முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

Read More »