Featured Posts

Recent Posts

இதுதான் இஸ்லாம் (பகுதி-1)

உலகில் வாழும்  மக்கள்  சமுதாயம்  ஆன்மீக ரீதியாகத் தாம்  பின்பற்றும்  மதங்கள், சமயங்கள் கலாச்சாரங்கள்  இவை  சிறந்ததா எனச்  சிந்திக்கும் பொருட்டு  திறந்த  மனதுடன்  இந்த  ஆய்வைக்  படிக்குமாறு முதலாவதாக கேட்டுக்கொள்கிறேன். நம்மைப் படைத்த  இறைவன்  நாம் உண்ண, உடுத்த,  வசிக்க, உறவு முறைகள்  இன்பம்  துன்பம்  நோய்  மருந்து  என பல் வேறு  சூழ் நிலைகளை  நம்மீது  விதித்து  நம்மை உலகில் வாழச் செய்துள்ளான்.

Read More »

மக்களில் சிறந்தவர் யார்?

1237. ”இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘பிறகு யார்?’ என்று கேட்டார்கள். ‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். புஹாரி : 2786 அபூஸயீத் …

Read More »

அல்லாஹ்வின் பாதையில் சிறிது நேரம் போரிடுவதின் சிறப்பு.

1234. இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2792 அனஸ் இப்னு மாலிக் (ரலி). 1235. இறைவழியில் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் போர் புரியச் செல்வது உலகத்தை விடவும் அதிலுள்ள பொருட்களை விடவும் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் …

Read More »

அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்தலின் சிறப்பு.

1232. அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கிறார். எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி …

Read More »

அறப்போருக்குச் செல்வதின் சிறப்பு.

1229. போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே …

Read More »

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர “கார்”களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது

Read More »

ஹஜ் கலைக்களஞ்சியம்

ஹஜ் “கலைக்களஞ்சியம்” வெளியீடு திட்டத்தை சவூதி இளவரசர் சல்மான் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (மார்ச் 29, 2008) தொடங்கி வைக்கிறார். இக்கலைக்களஞ்சியம் கடந்த வருடத்தின் ஹஜ் செய்திகளோடு புனித கஃபா மற்றும் மஸ்ஜித் நபவி புனிதப் பள்ளிகள் பற்றிய விபரங்களை கொண்டிருக்கும். இதன்மூலம் சமய, நாகரீகம் மற்றும் பொருளாதார விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

கருத்துச் சுதந்திரமா? ஆணவமா?

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் டென்மார்க்கிலிருந்து வெளிவரும் ஜீலன்ட்-போஸ்டன் பத்திரிக்கை 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. ஜீலன்ட் பத்திரிக்கை வெளியிட்ட 12 கேலிச்சித்திரங்களில் பதினொன்று நபி(ஸல்) அவர்களைப் பயங்கரவாதியாகவும் மற்றொன்று அவர்களைப் பாலியல் வாதியாகவும் சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டிருந்தன. துப்பாக்கி, வாள் ஆகியவைகள் பிடித்துக் கொண்டு இருப்பது போன்றும், அவர்கள் தலைப்பாகையில் வெடிகுண்டு இருப்பது போன்றும் கேலிச்சித்திரங்கள் வெளியாயின.

Read More »

முஸ்லிம்கள் யார்?

இனம், வர்ணம், நாடு, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து, தென் பிலிப்பைனிலிருந்து நைஜிரியா வரை உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பல்வேறு பாகங்களிலும் ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்களை அவர் தம் நம்பிக்கை ஒன்றே இணைத்து வைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கையே இஸ்லாம்!

Read More »