Featured Posts

Recent Posts

அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்

ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்டவைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்சரிக்கிறான்: “நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்” (24:21). மனிதனின் இரத்தம் ஓடும் நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். மனிதர்களை மானக்கேடானவற்றில் வீழ்த்துவதற்கு ஷைத்தான் கையாளும் வழிகளில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பதாகும். …

Read More »

ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல்

விசுவாசிகளில் ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல். இவ்வகையில் எமன் தேசத்து மக்களின் சிறப்பு பற்றி… 31- நபி(ஸல்)அவர்கள்தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி இறைநம்பிக்கை அதோ அங்கிருக்கும் யமன் நாட்டைச் சார்ந்ததாகும். அறிந்து கொள்ளுங்கள் கல் மனமும்,(இறக்கமற்ற) கடின சுபாவமும், ஒட்டகங்களின் வால்களை பிடித்தபடி அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாக)சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பவர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும் …

Read More »

அண்டை வீட்டாருக்கு உதவுவது..

அண்டை வீட்டாருக்கு உதவுவது விருந்தினரை உபசரிப்பது நல்லதை பேசுவது அல்லது மௌனமாய் இருப்பது ஈமானின் ஒரு கிளையாகக் கருதுதல் 29- அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-6018: அபூஹூரைரா(ரலி) …

Read More »

தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்..

தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது ஈமானின் அடையாளம் 28- அல்லாஹ்வின் தூதர் அவர்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) ஈமான் கொண்டவர் ஆகமாட்டார் எனக் கூறினார்கள். புகாரி-13: அனஸ்(ரலி)

Read More »

அல்லாஹ்வின் திருத்தூதரை நேசிப்பது

அல்லாஹ்வின் திருத்தூதரை ஒருவரின் குடும்பம் பிள்ளைகள், தந்தை பிற மனிதர்கள் ஆகியோரைக் காட்டிலும் அதிகம் நேசிப்பது 27- நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள் ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் கொண்டவர் ஆகமாட்டார். புகாரி-15: அனஸ்(ரலி)

Read More »

ஈமான் கொண்டவர் அதன் சுவையை..

ஈமான் கொண்டவர் அதன் சுவையை உணர்தல் 26- எவரிடம் மூன்று தன்மைகளக் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுமையை உணர்ந்தவராவார் (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியவராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-16: அனஸ்(ரலி)

Read More »

இஸ்லாத்தில் சிறந்தது காரியங்களில் சிறந்தது

இஸ்லாத்தில் சிறந்தது எது? காரியங்களில் சிறந்தது எது? 24- ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்று கூறினார்கள். புகாரி-12: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) 25- அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் …

Read More »

யூத கிருஸ்தவர்கள் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா) நாள்: 03.03.2006

Read More »

ஈமானின் அநேக கிளைகள்

21- ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-9: அபூஹூரைரா(ரலி) 22- அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர்(அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே,அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-24: அப்துல்லாஹ் (இப்னு உமர்(ரலி) 23- …

Read More »

ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவர்

எந்த வித சந்தேகமுமின்றி ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவாறு அல்லாஹ்வைச் சந்திப்பவர் சுவனில் நுழைவார். அவரை நரக நெருப்பு தீண்டாது. 17- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் ஈஸா(அலை)அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன(ஆகுக! என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்) என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர், என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை …

Read More »