Featured Posts

Recent Posts

ஓதிப் பார்த்தல்

ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது.

Read More »

காந்திஜியின் கடைசி வார்த்தைகள்

காந்தியின் காரியதரிசியாக பணியாற்றி பிறகு இலண்டனில் தொழில் செய்த திரு.வெங்கட் ராமன் கல்யாணம் அவர்கள் சுமார் நாண்கு ஆண்டுகள் காந்தியுடன் பணியாற்றியுள்ளார். காந்தி சுடப்பட்ட கடைசி நிமிடம் வரை அருகில் இருந்தவர், “காந்தி, கடைசியாக ஹே ராம்!” என்று சொல்லவில்லை என்றதாக மலர் மன்னன் தனது கட்டுரையில் சொல்லியுள்ளார். “காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (7)

இஸ்லாத்தின் வெற்றியின் மர்மம் எண்ணிலடங்கா இடர்பாடுகளுக்கு மத்தியில் முஸ்லிம் படைகள் அடைந்த பெரும் வெற்றி கண்டு அக்காலத்தில் அவற்றை அவதானித்தவர்கள் வியப்படைந்தனர். ஒரு சிறு படை, சிறந்த ஆயுதம் கொண்ட பெரும் படைகளை எப்படி துவம்சம் செய்ய முடிந்தது என்பது அவர்களுக்கு விளங்க முடியாத புதிராக இருந்தது. அவர்கள் முஸ்லிம் படையின் ஆள் பலத்தை மட்டுமே கருத்தில் கொண்டனர். அதனால் தான் அவர்கள் திகைப்படைந்தனர். முஸ்லிம் படைகளின் உடல் பலத்துக்கு …

Read More »

துற்குறி

துற்குறி என்பது அபசகுனமாகும். அல்லாஹ் கூறுகிறான்: “அவர்களுக்கு ஒரு நன்மை வந்து விட்டால் இது எங்களுக்கு வரவேண்டியதுதான் என்று கூறுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டாலோ மூஸாவையும் அவர்களுடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாகக் கருதுவார்கள்” (7:131) அரபுகள் பயணம் மேற்கொள்ள அல்லது வேறு ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் ஒரு பறவையைப் பிடித்து பறக்க விடுவார்கள். அது வலது பக்கமாகப் பறந்தால் அதை நற்குறியாகக் கருதி …

Read More »

வாழும் கோட்சேக்கள்

//மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள்// – மலர் மன்னன் மாப்பிள்ளமார் என்று அறியப்படும் கேரள மலபாரி முஸ்லிம்கள் எகிப்துடனும், ரஷ்யாவுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். தொலை தூரதேசங்களுடன் வணிக உறவு கொண்டிருந்த மாப்பிள்ளமார்கள், மலையாளம் மட்டுமே அறிந்திருந்தார்கள் என்பது மலர் மன்னனின் அறியாமையா? அல்லது வரலாற்றைத் திரிக்கும் அவசரத்தில் தன்னையும் அறியாமல் அவ்வாறு குறிப்பிட்டாரா? என்று தெரியவில்லை. அரேபியர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பால் இஸ்லாத்தில் இணைந்த …

Read More »

மினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்? (Mina Stampede 2006)

கடந்த 12-ந்தேதி ஜனவரி 2006 (துல்ஹஜ் பிறை 12) மதியம் 12.30லிருந்து 1.30க்கு இடைப்பட்ட நேரத்தில் மினாவில் கூட்ட நெரிசலில் நசுங்கி இறந்த 363 பேர்களின் இறப்புச் செய்தி பலரை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. ஊடகங்களால் மேம்போக்காக பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி மற்றும் அதனை பிரதிபலிக்கும் மக்களின் மனநிலை இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டதோடு, இதுபோன்ற துயர சம்பவம் இனிமேலும் நடவாமல் இருக்க ஒரு துரும்பையாவது நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன். …

Read More »

கோட்சேயும் சில (அ)நியாயங்களும்

திரு.டோண்டு ராகவன் அவர்கள் “காந்தியும், கோட்சேயும்” என்ற தலைப்பில் திரு.மலர் மன்னன் என்ற காவிச் சிந்தனையாளரின் கட்டுரையை மறுபதிவு செய்திருந்தார்கள். கட்டுரையின் சாராம்சம் நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியை படுகொலை செய்ததற்கு, காந்தியாரின் முஸ்லிம்களின் மீதான பரிவே காரணம் என்று சொல்லி இருந்ததோடு கோட்சேக்கு எவ்வித இயக்கப் பின்னனியும் இல்லை என்றும், காந்தியாரை சுட்டுக் கொல்லும்போது மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்றும் இன்னும் சில விநோதமான …

Read More »

வழிபாடுகளில் முகஸ்துதி

நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் தொழுவதைப் போல. அல்லாஹ் கூறுகிறான்: “இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை …

Read More »

பெங்களூர் தாக்குதல் – பொய்ப்பிரச்சாரங்கள்

தமிழக செய்தி ஊடகங்கள் நடத்திய பொய்ப்பிரச்சாரம்! மாலை மலர்: நம்பர் 1 மாலை நாளிதழ் அல்ல! நம்பர் 1 பொய் நாளிதழ்!! காசுக்காக எதையும் செய்யும் துணிவு சிலருக்கு உண்டு. அந்த வரிசையில் சில பத்திரிகைகளும் சேர்ந்துள்ளது வேதனைக்குரியது. பெங்களூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் எப்படியெல்லாம் பொய்களை செய்தியாக்கி காசாக்கின என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக ‘மாலை மலர்’ நாளிதழ் விளங்கி வருகின்றது. இந்தியாவின் நம்பர் 1 தமிழ் …

Read More »

மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம்..

மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்– மு. தேவசகாய பாஸ்கரன் “மார்க்கம் ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம்” என்று கூறும் இக்கட்டுரை ‘எங்கே கிறித்தவம்? யார் கிறித்தவர்?’ என்ற தலைப்பில் தமிழகச் திருச்சபையின் தனிப்பெரும் அரசியல் ஆன்மீக சமூக வார இதழான ‘நம்வாழ்வு’ ஜனவரி 01-08, 2006-ல் பிரசுரமானது. (Source: http://www.tmmkonline.org) ‘இயேசுவின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே’ என்ற வார்த்தைகளை அனைத்து கிறிஸ்தவ …

Read More »