Featured Posts

Recent Posts

அந்நியப் பெண்ணைப் பார்த்தல்

“(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்” (24:30) கண்கள் செய்யும் விபச்சாரம் (விலக்கப்பட்டவைகளைப்) பார்ப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி) மார்க்கம் அனுமதிக்கின்ற ஒரு அவசியத் தேவைக்காகப் பார்ப்பது விதிவிலக்காகும். உதாரணமாக ஒருவன் …

Read More »

அந்நிய ஆணுடன் பெண் தனியே பயணித்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மண முடிப்பதற்கு விலக்கப்பட்ட ஆண் துணையுடன் அல்லாது ஒரு பெண் பயணம் செய்ய வேண்டாம்’ அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:புகாரி, முஸ்லிம். இத்தடை ஹஜ் எனும் புனிதப் பயணம் உட்பட எல்லாப் பயணங்களையும் உள்ளடக்கும். மணமுடிப்பதற்கு ஆகுமான – அந்நிய ஆணுடன் அவள் பயணம் செல்வது தீய மனிதர்களை அவளுடன் சில்மிஷங்கள் செய்யத் தூண்டும். பலவீனமான அவள் சில போது அதற்கு …

Read More »

பெண்கள் நறுமணத்துடன் வெளியே சுற்றுதல்

ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாடையை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள் (அஹ்மத்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும் இன்றைய காலத்தில் இது மிக அதிகமாகக் காணப்படுகிறது. சில பெண்கள் இதை எந்த அளவுக்கு அலட்சியமாக, சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் எனில் வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு தம்முடைய டிரைவர், வியாபாரி, மற்றும் பள்ளிக்கூடத்தின் காவலாளி ஆகியோரின் …

Read More »

விசுவாசியின் விசுவாசம்

அல்லாஹ்வுக்கும், அவன் திருத்தூதருக்கும் கட்டுப்படுதல், முஸ்லிம் ஆட்சியாளர்களிடமும் பிற முஸ்லிம்களிடமும் உண்மையாளராகத் திகழ்தல் 35- நபி(ஸல்)அவர்களிடம் நான் (அவர்களது கட்டளையைச்) செவியேற்று அதற்குக் கீழ்படிந்து நடப்பேன் என்று உறுதிமொழியளித்தேன். அப்போது என்னால் இயன்ற விஷயங்களில் என்றென்றும் முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நன்மையே நாடுவேன், என்றும் சேர்த்துச் சொல்லும்படி என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7204: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரலி) தீய செயல்கள் புரியும்போது ஈமான் குறைதல் தீய செயல்கள் புரியும் போது …

Read More »

முஸ்லிம் குறித்த மனோபாவ சிக்கல்கள்

– முஜீப் ரகுமான்நன்றி: புதிய காற்று மாத இதழ் (மார்ச் 2006) இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு முன் எப்போதையும் விட பல்வேறு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆங்கில ஆட்சியின் காலத்திலிருந்தே இந்திய சமூக அமைப்பிலிருந்து முஸ்லிம்களை அந்நியப் படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய சூழலில் நூற்றுக்கு தொண்ணூறு சதம் நலிவுற்றவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் நிரந்தர அச்ச வலையில் கேள்விக்குறிகளாக நிற்கின்றனர். …

Read More »

ஜெயமோகனின் மனுதர்மம்

– மேலாண்மை பொன்னுச்சாமிநன்றி: கீற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு நடத்துகிறது. பல்லாயிரம் பேர் திரண்டிருந்த அந்த கலாச்சாரத் திருவிழாக் கூட்டத்தில் அப்போதைய பொதுச் செயலாளர் அருணன் ஒரு சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறார். அப்போது துணைப் பொதுச் செயலாளரான நான் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினேன். அந்த நூல் எது தெரியுமா? திசைகளின் நடுவே. அந்த நூலாசிரியரும் மேடையில் உட்கார்ந்திருந்தார். யார் தெரியுமா? …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (14)

இதுவரை, இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கட்டத்தில் முஸ்லிம் உலகில் பல்கிப் பெருகிய தீமைகளை அளவிட்டுக் காண்பிக்க ஒரு முயற்சி செய்துள்ளேன். இரண்டாம் கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட தீய சக்திகள் இஸ்லாமிய வரலாற்றின் மூன்றாம் கட்டம் தோன்றுவதற்கு ஒத்துழைத்தன. இம்மூன்றாம் கட்டத்தில் முஸ்லிம் உலகின் ஒரு பெரும் பகுதியில் ஐரோப்பியக் குடியேற்ற நாட்டு ஆட்சி தாபிக்கப் படுவதைக் காண்கிறோம். பிலிப்பைன் முதல் மொரோக்கோ வரையுள்ள பூகோளப் பகுதியில் எல்லா இஸ்லாமிய நாடுகளும் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (13)

முடியரசு முஸ்லிம்களிடையே இன உணர்ச்சியை பிறப்பித்து வளர்த்தது. தம் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மன்னர்கள் இனவேறுபாடுகளை, பழி பாவத்திற்கு அஞ்சாமல் பயன்படுத்தினர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உமையாக்களுக்கும் அப்பாசியருக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தில் அப்பாசியர் பாரசீகர்களின் ஆதரவைப் பெற நாடினர். இதற்காக அரேபிய உமையாக்களுக்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு அவர்கள் பாரசீகர்களைத் தூண்டினர். பல்வேறு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையைப் பயன்படுத்தும் கொள்கையைப் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் கடைபிடித்து …

Read More »

அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்

சமூகப் பழக்கவழக்கங்களில் சில நம் சமுதாயத்தில் இறைமார்க்கத்தையும் விஞ்சி விட்டன. அதுபோல மக்களின் தவறான பழக்கங்களும், பாரம்பரிய நடைமுறைகளும் இறைச்சட்டங்களை எந்த அளவுக்கு மிகைத்து விட்டன எனில் யாருக்கேனும் ஷரீஅத்தின் சட்டங்களை நீ எடுத்துச் சொன்னால், அவற்றை ஆதாரத்தோடு நிரூபித்து, சான்றுகளையும் தெளிவு படுத்தினால் உடனே உன்னை பழமைவாதி, அடிப்படைவாதி, குடும்ப உறைவை குலைப்பவன், நல்ல எண்ணங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துபவன்… என்றெல்லாம் அவதூறு கூறி விடுவர். அத்தகைய பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (12)

இன, பிரதேச வேறுபாடுணர்ச்சிகள் இக்காலப்பிரிவில் மற்றொரு தீமை தலைதூக்கியது. இது இஸ்லாமிய உலகின் ஐக்கியத்தையே சிதறடிக்கக் கூடிய ஆபத்தாக மாறியது. அது முஸ்லிம் நாடுகளில் வளர்ந்த பிரதேசவாதமும் இனவாதமுமாகும். இஸ்லாமியக் கொள்கையில் மனிதத் தன்மைக்கு ஒரு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மனித இனம் இறைவனின் குடும்பம் என்றும், அதன் ஒவ்வோர் உறுப்பினரும் மற்றவர்கள் அனைவரதும் நல்வாழ்வுக்குப் பொறுப்பாளராவார் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒருமைப் பாட்டினை …

Read More »